செய்திமுரசு

மோடியுடன் அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் முன்னிலையில் இன்று இந்தியா- அவுஸ்ரேலியா இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்-ஐ சந்தித்தார். இந்தியா – அவுஸ்ரேலிய இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் புதுடெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் மே முதல்!

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள வெகுஜனப்போராட்டங்களிற்கு அனைத்து தமிழ அரசியல் தலைவர்களது ஆதரவையும் கைதிகளது குடும்பங்கள் நேரினில் சந்தித்து கோரிவருகின்றன. எதிர்வரும் மே மாதம் முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளது போராட்டத்திற்கு ஆதரவு கோரி இச்சந்திப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனிடையே தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து. ...

Read More »

அவுஸ்ரேலிய பிரதமர் இந்தியா பயணம்

அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு நேற்று (9) சென்றடைந்துள்ளார். புதுடில்லி வந்துள்ள டர்ன்புல்லுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-அவுஸ்ரேலிய இடையை ராணுவம்,பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. மேலும் சுற்றுப்புறச்சூழல்,விளையாட்டு ஆகிய துறைகளிலும் ஒப்பந்தம் ஏற்படலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் மால்கமின் இந்த பயணத்தின்போது எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்று தெரிகிறது. கடந்த 2015-ம் ஆண்டு அவுஸ்ரேலியாவின் பிரதமராக மால்கம் பதவி ஏற்றபின்பு அவர் ...

Read More »

நீதிமன்ற செயற்பாடுகளில் பிரதமர் ரணில் தலையிடுகின்றார்!

அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நீதிமன்ற செயற்பாடுகளில்; தலையீடு செய்துள்ளார் என என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அவ் அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே ...

Read More »

903 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருள் பறிமுதல்!

அவுஸ்ரேலியாவில், 903 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருள், கைப்பற்றப்பட்டுள்ளது. அந்நாட்டில் நிகழ்ந்து இருக்கும் ஆகப் பெரிய சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் சம்பவம் அது. Ice எனும் crystal methamphetamine போதைப் பொருள் சீனாவிலிருந்து, அவுஸ்ரேலியாவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. பெட்டிகளில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட அவை, மெல்பர்ன் நகரிலுள்ள கிடங்கு ஒன்றில், கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 680 மில்லியன் அமெரிக்க டாலர். அவுஸ்ரேலிய  மத்திய காவல் துறையும், விக்டோரியா மாநில காவல்துறை  பிரிவும் இணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில், அந்தக் கடத்தல் முயற்சி ...

Read More »

குரங்குகளுடன் தனியாக வாழ்ந்து வந்த சிறுமி மீட்பு

குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர். குரங்குகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் குழந்தை சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

Read More »

கீத் நொயாரை தாக்கிய சம்பவ சந்தேக நபர்களின் பிணை இரத்து!

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்து கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போதே கல்கிஸ்சை நீதிமன்றம் பிணை உத்தரவை இரத்துச் செய்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

சிறீலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க அவுஸ்ரேலியா உதவி

சிறீலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க, அனைத்துலக நிதிக் கூட்டுத் தாபனத்துடன் இணைந்து அவுஸ்ரேலியா அரசாங்கம் 15மில்லியன் டொலரை வழங்க முன்வந்துள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தான் மாணவருக்கு கத்தி குத்து!

அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தான் மாணவர் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இது ஐ.எஸ். தொடர்பு தாக்குதலா என்ற கோணத்தில் அவுஸ்ரேலிய காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தானை சேர்ந்த 29 வயது மிக்க இளைஞரை இரண்டு பேர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த அக்பர் என்ற அந்த மாணவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் நியூ சவுத் வால்ஸ் என்ற பகுதியில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டார். தாக்குதலுக்கு ஆளான அந்த மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் அவர் உயிருடன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஆறு உடைந்ததால் மூழ்கிய நகரம்

அவுஸ்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராக் கேப்டால் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி வெள்ளத்தால் மூழ்கியது. அவுஸ்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பிட்ஸ்சோவி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி சென்று கொண்டு இருந்தது. ராக் கேப்டால் என்ற இடத்தில் ...

Read More »