903 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருள் பறிமுதல்!

அவுஸ்ரேலியாவில், 903 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருள், கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்நாட்டில் நிகழ்ந்து இருக்கும் ஆகப் பெரிய சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் சம்பவம் அது.

Ice எனும் crystal methamphetamine போதைப் பொருள் சீனாவிலிருந்து, அவுஸ்ரேலியாவிற்குள் கொண்டு செல்லப்பட்டது.

பெட்டிகளில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட அவை, மெல்பர்ன் நகரிலுள்ள கிடங்கு ஒன்றில், கண்டெடுக்கப்பட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 680 மில்லியன் அமெரிக்க டாலர். அவுஸ்ரேலிய  மத்திய காவல் துறையும், விக்டோரியா மாநில காவல்துறை  பிரிவும் இணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில், அந்தக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில், அவுஸ்ரேலிய  ஆண்கள்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.