Home / செய்திமுரசு (page 778)

செய்திமுரசு

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்ட வேண்டும் – பான்கிமூன்

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐநா செயலர் பான்கிமூன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தினையும், மனித உரிமையின் மதிப்பினை ஏற்படுத்துவதற்கும் இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் ...

Read More »

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் தான் இறந்தார் என்று ஜப்பான் அரசு ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கி ஆயுதப் போராட்டம் நடத்தினார். அப்போது ஜப்பான் சென்ற சுபாஷ் அதன் பிறகு நாடு திரும்பவில்லை. நாடு விடுதலை அடைந்த பின்பும் கூட அவர் இந்தியாவில் இல்லை. இதனால் நேதாஜி பற்றிய ...

Read More »

அவுஸ்திரேலிய நிறுவனத்திடம் இலஞ்சம் கோரியது யார்?

2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயம் மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது ஊழியர்களில் ஒருவர் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சம் கோரியதாக அந்நாட்டு இணையத்தளம் வெளியிட்ட செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலேசானை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளார். இந்த ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பார்வையற்றவர்களுக்கான கரன்சி நோட்டுகள்

அவுஸ்ரேலியாவில் பார்வையற்றவர்கள் எளிதில் உபயோகப்படுத்தும் வகையில் கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. சிட்னியைச் சேர்ந்த கனார் மெக்லெட்(15) என்ற பார்வையற்ற சிறுவன் சமீபத்தில் இணையத்தில் மனு ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் பார்வையற்றோர்கள் தொட்டு உணரக்கூடிய வகையில் வங்கி நோட்டுகள் வேண்டும் என குறிப்பிட்டிருந்தான், இதற்கு 56 ஆயிரம் பேர் தங்களது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர். இதன் காரணமாகவே மதிப்பு உயர்த்தப்பட்ட அளவில், இரண்டு புள்ளிகளை உடைய புதிய ஐந்து டொலர் ...

Read More »

நாளை ஐ.நா செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்திற்கு அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அழைப்பு விடுத்துள்ளது. யாழ். பொது நூலகம் முன்பாக நாளை (2) வெள்ளிக்கிழமை காலை 8.30 அளவில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள்குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலி. வடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு ...

Read More »

இன்று நல்லூர் கந்தனின் இரதோற்சவப் பெருவிழா

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று (31) நடைபெற்றது. ஆலய வரலாறு – தமிழ் மன்னன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம அமைச்சரான செண்பகப் பெருமாள் என்றழைக்கப்பட்ட புவனேகபாகு என்பவனால் 884ஆம் ஆண்டளவில் இவ்வாலயம் கட்டப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவனது பெயரே இவ்வாலயத்தின் கட்டிடத்தில் ‘ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு’ என பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த ...

Read More »

அவுஸ்ரேலியா ஏ அணிக்கெதிரான போட்டியில் இந்தியா தோல்வி

இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அவுஸ்ரேலியாவில் இந்தியா ‘ஏ’, அவுஸ்ரேலியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, நேஷனல் பெர்பார்மன்ஸ் அணிகள் மோதும் ‘நான்கு நாடுகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட்’ தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா ‘ஏ’ அணி தனது கடைசி லீக்கில் இன்று அவுஸ்ரேலியா ‘ஏ’ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. ...

Read More »

ரகசியங்களை இனி வெளியிட மாட்டோம்- அவுஸ்ரேலிய நாளிதழ்

இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக கசிந்த ரகசியங்களை வெளியிட கூடாது என கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் இனி இது தொடர்பான செய்திகளை வெளியிட மாட்டோம் என அவுஸ்ரேலிய நாளிதழ் அறிவித்துள்ளது. இந்தியக் கடற்படைக்காக பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனம் 6 ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ...

Read More »

எனது நல்ல புகைப்படத்தை வெளியிடுங்கள் – தேடப்படும் அவுஸ்ரேலிய பெண்

குற்ற வழக்கில் தேடப்படும் அவுஸ்ரேலிய பெண் ஒருவர் தனது சோகமான புகைப்படத்தை மாற்றி, புன்னகையுடன் இருக்கும் அழகான படத்தை வெளியிடும்படி காவல்துறையினரை முகப்புத்தகம் மூலம் கேட்டுக்கொண்டது வைரலாக பரவி வருகிறது. அவுஸ்ரேலியாவை சேர்ந்த எமி சார்ப் என்ற இளம்பெண், சொத்து தொடர்பான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், எமி சார்பை கண்டுபிடிப்பதற்காக அவரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டனர். இளம்பெண்ணின் இந்த ...

Read More »

மைத்திரி ஊழல்- அவுஸ்திரேலிய ஊடகச் செய்தி -வெளிவிவகார அமைச்சு மௌனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறு செய்திருப்பதாக உறுதி செய்யப்பட்டால், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒரு வார்த்தை கூட பேச போவதில்லை என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் ...

Read More »