அவுஸ்திரேலிய நிறுவனத்திடம் இலஞ்சம் கோரியது யார்?

2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயம் மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது ஊழியர்களில் ஒருவர் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சம் கோரியதாக அந்நாட்டு இணையத்தளம் வெளியிட்ட செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலேசானை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் ஜனாதிபதிக்கு தொடர்பில்லை. இதனால், செய்தி உண்மையா என்றும் அது உண்மையாக இருந்தால் இலஞ்சம் கோரியது யார் என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் இது தொடர்பாக மேற்கொள்ளும் விசாரணைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால், சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.