இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்ரேலியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது.
நான்காவது போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை அணியின் கப்டன் மேத்யூஸ் காயம் அடைந்தார். இதனால் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அணியில் இருந்து திசாரா பெரேரா, லக்ஷ்மண் சண்டகான் ஆகியோர் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேருக்கும் பதிலாக உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, தசுன் ஷனகா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியா அணி வருகிற 30-ந்தேதி முதல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரியான் ஹாரிஸ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சென்று ஆஷஸ் தொடரில் விளையாடும்போது ஓய்வு பெற்றார். தற்போது தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன், துணை பயிற்சியாளர் டேவிட் சாகேர் ஆகியோருடன் இணைந்து பணிபுரிய உள்ளார்.
‘‘நான் இந்த பயிற்சியாளர் பதவியை வகிக்க மிகவும் ஆசைப்டுகிறேன். ஆனால், நான் தற்போது வரை கற்றுக்கொண்டு வருகிறேன். பின்னர் இதுபோன்ற சவாலான பணியை சிறப்பாக செய்வேன். போதுமான அளவிற்கு நான் கற்றுக்கொண்டு விட்டால், எதுவரை நான் போக விரும்புகிறேனோ, அதுவரை நான் போகலாம்’’ என்றார்.