வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐநா செயலர் பான்கிமூன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தினையும், மனித உரிமையின் மதிப்பினை ஏற்படுத்துவதற்கும் இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் இது.
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் அவர்களின் சொந்த நிலங்களுக்குச் செல்ல வேண்டும். மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அதிபர் மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
எனவே, வடக்குக் கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் குறைக்கப்பட்டு, மக்களின் மீள் குடியேற்றம் நடைபெறவேண்டும். இத்தகைய செயற்பாடுகளே மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் எனவும் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal