அவுஸ்ரேலியாவில் பார்வையற்றவர்கள் எளிதில் உபயோகப்படுத்தும் வகையில் கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
சிட்னியைச் சேர்ந்த கனார் மெக்லெட்(15) என்ற பார்வையற்ற சிறுவன் சமீபத்தில் இணையத்தில் மனு ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.
அதில் பார்வையற்றோர்கள் தொட்டு உணரக்கூடிய வகையில் வங்கி நோட்டுகள் வேண்டும் என குறிப்பிட்டிருந்தான், இதற்கு 56 ஆயிரம் பேர் தங்களது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாகவே மதிப்பு உயர்த்தப்பட்ட அளவில், இரண்டு புள்ளிகளை உடைய புதிய ஐந்து டொலர் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து எதிர்காலத்தில் பிற டொலர் நோட்டுகளில் அதை புரிந்துக் கொள்ளத்தக்க வெவ்வேறு எண்ணிக்கையில் புள்ளிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.