Home / செய்திமுரசு (page 750)

செய்திமுரசு

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவு கூரும் சுவரொட்டிகள்!

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ மாவீரர் தினத்தை நினைவு கூரும் சுவரொட்டிகள் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ மாவீரர் தினம் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களால் ஆண்டு தோறும் நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக இவ்வாண்டும் மாவீரர் தினத்தை ஒட்டியதான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அத்தோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Read More »

ஆஸ்த்துமாவால் அவதிப்படும் அவுஸ்ரேலியர்கள்

அவஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் மகரந்த ஒவ்வாமையால் பலருக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் இறந்துள்ளனர்.  அந்தச் சம்பவம் காலவரையற்ற அவசர நிலை என பதிவாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை விக்டோரியா மாநிலத்தில் பெய்த கடும் மழையாலும் காற்றாலும் ஏற்பட்ட ஈரத்தை புல்லரிசி பூஞ்சருகுகள் (Rye Grass Pollen) உள்வாங்கின. அதன் பின் அவை ஆயிரக்கணக்கில் சிறிய துகள்களாய் மாறின. எண்ணாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மெல்பர்ன் மருத்துவமனைகள் சிகிச்சையளித்து வருகின்றன.

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு செல்வது இலகுவாக்கப்பட்டுள்ளது

இம்மாதம் முதல்அவுஸ்ரேலியாவுக்கான தற்காலிக வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது இலகுவானதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றப்பட்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன . கடந்த 19ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் விசா விண்ணப்ப நடைமுறையை மிகவும் இலகுவாக்கும் என அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஏற்கனவே இருந்த 7 விசா உபபிரிவுகள் புதிய 4 பிரிவுகளின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன ஆகியனவே இப்புதிய 4 பிரிவுகளில் அடங்குகின்றன. குடிவரவுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி இந்திய பெண்கள் அணி வெற்றி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி  இந்திய பெண்கள் அணி வெற்றி. இந்திய பெண்கள் கோக்கி அணி, அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்திய ...

Read More »

அவுஸ்ரேலிய தேர்வுக்குழு தலைவர் பதவியை பற்றி சிந்திக்கும் ரிக்கி பாண்டிங்

அவுஸ்ரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவி குறித்து தன்னிடம் ஆலோசித்தால் அதனை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பேன் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு சேர்மனாக ரோட் மார்ஷ் இருந்தார். நீண்ட காலமாக இந்த பதவியில் இருந்த மார்ஷ் அடுத்த வருடம் மத்தியில் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறினார். ஆனால் அவுஸ்ரேலியா  சமீபத்தில் இலங்கை அணிக்கெதிராக தொடரை 0-3 எனவும், தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக தொடரை ...

Read More »

அவுஸ்ரேலியாவின் ஒருநாள் அணியில் புதுமுக வீரர்

நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியா விளையாட இருக்கிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியில் புதுமுக வீரர் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று(24) அடிலெய்டில் பகல் – இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்த பின்னர் அவுஸ்ரேலியா ...

Read More »

நாளை தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான போட்டி

பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் தென்ஆப்பிரிக்க கப்டன் பிளிஸ்சிஸ் அபராதத்தோடு தப்பினார். பிளிஸ்சிஸ் மீது புகார் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் ஹோபர்ட்டில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நாளை (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி ...

Read More »

அவுஸ்ரேலியாவிடம் இந்தியா தோல்வி

4 நாடுகள் விளையாடும் ஹாக்கி தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 2-3 என தோல்வியடைந்தது. இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நான்கு அணிகள் மோதும் ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான அவுஸ்ரேலியாவும், சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின. 21-வது நிமிடத்தில் இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் முதல் ...

Read More »

எழுக தமிழ் பேரணி மட்டக்களப்பில் எதிர்வரும் ஜனவரி மாதம்

தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வைத்தியக் கலாந்தி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் நேற்றைய தினம் கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும், நிர்ப்பந்தங்களாலும், அழுத்தங்களாலும், எமது மக்களின் நீதிக்கான பயணம் தடைப்படலாம் ...

Read More »

பாதுகாப்புச் செயலரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்! -கலாநிதி சரத் விஜேசூரிய

சிறீலங்காப் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென நீதிக்கான தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சரத் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு எதிராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேனவிடம் தான் முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கலாநிதி சரத் விஜேசூரிய தெரிவித்தார். ...

Read More »