செய்திமுரசு

அவுஸ்ரேலியா-பொழுதுபோக்கு பூங்காக்களில் அதிரடி பாதுகாப்பு சோதனை

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்களிலும் அதிரடி பாதுகாப்பு சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள ட்ரீம்வேர்ல்ட் என்றழைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில், நீர் சவாரி செய்யும் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்குவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இம் மாத துவக்கத்தில் குயின்ஸ்லாந்தில் ஒரு கட்டட மனையில் சுவரொன்று இடிந்து விழுந்ததில் இருவர் பலியானார்கள். பொழுது போக்கு ...

Read More »

அவுஸ்ரேலியா புகலிடக்கோரிக்கையாளரின் மனு நிராகரிக்கப்பட்டது

பப்புவா நியூகினியின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 590 புகலிடக் கோரிக்கையாளர்களை, அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பி வைப்பதுடன்,அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட காரணத்தினால் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களும்  நிராகரிக்கப்பட்டுள்ளன. குறித்த மனுக்களில் 590 புகலிடக் கோரிக்கையாளர்களும் கையெழுத்திடாததினால் அவை செல்லுபடியாகாது என்று ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் வாதாடிய ப்புவா நியூகினி சட்டத்தரணிகள் குறிப்பிட்டதை அடிப்படையாகக் கொண்டு இரு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களைச் ...

Read More »

அவுஸ்ரேலிய பேருந்தில் இந்தியர் எரித்துக் கொலை

அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்மீத் அலீஷீர் என்ற பேருந்து ஓட்டுநர் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். பிரிஸ்பேனில் பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் மன்மீத், பேருந்து ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒருவர் எரி திரவம் ஒன்றை மன்மீத் மீது ஊற்றியுள்ளார். அடுத்த கணமே, தீக்குச்சியைக் கிழித்து அவர் மீது வீசிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதில் மன்மீத் அந்த இடத்திலேயே தீயில் கருகி பலியாகியுள்ளார். அப்போது, பேருந்தில் இருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தீ பேருந்து முழுவதும் பரவுவதற்குள் அனைத்து பயணிகளும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டதால் ...

Read More »

பெற்ற மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய பெற்றோர்

அவுஸ்ரேலியாவை சேர்ந்த பெற்றோர் தாங்கள் பெற்ற மகளை கடந்த 15 வருடங்களாக பாலியல் ரீதியில் துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் தந்தை கூர்மையான ஆயுதங்களைக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கொடூரமாக துன்புறுத்தியதாகவும் சிட்னி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த பெண்ணை மூன்று நாட்களாக பிளாஸ்டிக் பெட்டியில் பூட்டி ஷெட்டில் அடைத்து வைத்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. 59 வயதுடைய தந்தைக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் 36 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு பரோலில் வெளிவர தகுதி உடையவர் ...

Read More »

அவுஸ்ரேலிய தீம் பார்க்கை திறப்பதில் மேலும் தாமதம்

அவுஸ்ரேலியாவில் நான்கு பேரை பலிகொண்ட தீம் பார்க்கை மீண்டும் திறக்கும் முடிவுக்கு காவல்துறை ஆட்சேபம் தெரிவித்ததால் மேலும் சில நாட்கள் மூடப்பட்டிருக்கும். அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாநிலத்தில் சுற்றுலாவாசிகள் அதிகமாக வருகைதரும் கோல்ட் கோஸ்ட் நகரின் கூமோரா பகுதியில் ‘டிரீம் வேர்ல்ட்’ என்னும் பிரபல தீம் பார்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு அம்சமான ‘தண்டர் ரிவர் ரேபிட் ரைட்’ என்னும் அலையடிக்கும் ஆற்றுநீரில் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை குகைகள் மற்றும் மரப்பாலங்களை கடந்து ஆறுபேர் அமர்ந்து செல்லும் பரிசல் சவாரி ...

Read More »

சுவிஸில் ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி

வெண்பனி தேசமென செல்லமாக அழைக்கப்படும் சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது. சொலத்தூண் மாநகரில் பிரபலமான சோலோ மூவி உரிமையாளர் வசி என்பவராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோலோ மூவியில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து தற்சமயம் தனியாக தொழில் புரியும் நீதன் என்பவருடன் நீண்டநாட்களாக முறுகல் நிலையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ...

Read More »

3 நிமிடத்தில் 122 செல்பி

3 நிமிடத்தில் 122 செல்பிக்கள் எடுத்து அமெரிக்க பாடகர் டோனி வால்பெர்க் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார். ஸ்மார்ட் போன்களின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைமீது நின்று செல்பி, ஆபத்தான இடங்களில் செல்பி என விதவிதமாக செல்பி எடுத்து உலகளவில் பலர் புகழ்பெற்று வருகின்றனர். இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே அதிகபட்ச உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் டோனி வால்பெர்க் 3 நிமிடங்களில் 122 செல்பி எடுத்து ...

Read More »

அவுஸ்ரேலியா: கேளிக்கைத் தள அசம்பாவிதத்தில் பிழைத்த 2 சிறார்கள்

அவுஸ்ரேலியாவின் ட்ரீம்வர்ல்ட் (Dreamworld) கேளிக்கைத் தலத்தில் ஏற்பட்ட விபத்தில், அதிர்ஷ்டவசமாக இரு சிறுவர்கள் தப்பிப் பிழைத்ததாக அந்நாட்டுப் காவல்துறையினர்  கூறியுள்ளனர். அந்தச் சம்பவத்தில் 4 பேர் மாண்டனர்.அதிவேகமாக ஓடும் செயற்கை ஆற்று படகுப் பயணத்தின்போது சம்பவம் ஏற்பட்டது. இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதை கண்காணிப்புக் கேமரா பதிவுகள் காட்டின. ஒரு படகில் இருந்த அந்த இரு சிறுவர்கள் தூக்கி எறியப்பட்டதாகப் காவல்துறையினர் கூறினர். கோல் கோஸ்ட்டில் அமைந்துள்ள ட்ரீம்வர்ல்ட் உல்லாசப் பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது.

Read More »

‘நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியை இந்திய அரசு ஊக்குவிக்கவேண்டும்’ – அவுஸ்ரேலியா பேராசிரியர் கோரிக்கை

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியை இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பிரபல அவுஸ்ரேலியா பேராசிரியர் கூறினார். அவுஸ்ரேலியாவின் உயரிய விருது அவுஸ்ரேலியா தலைநகர் கான்பெர்ரா நகரில் உள்ள அவுஸ்ரேலியா தேசிய பல்கலைக்கழகத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மின்னணு பொருள் பொறியியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர், சென்னுப்பட்டி ஜெகதீஸ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் அவுஸ்ரேலியா’ என்னும் உயரிய விருதையும் பெற்றவர் ஆவர். புகழ் பெற்ற இந்திய கல்வி நிறுவனங்களான டெல்லி ஐ.ஐ.டி, சென்னை ...

Read More »

அவுஸ்ரேலியாவை சேர்ந்த வயதான உராங்குட்டான் – கின்னஸ்

உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமை அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பான் என்ற பெண் உராங்குட்டானுக்கு கிடைத்திருக்கிறது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பான் மிக வயதான உராங்குட்டான் என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மலேசியா நாட்டில் 1956-ம் ஆண்டு பிறந்த பான் அங்குள்ள சுல்தான் ஜோகூர் என்ற மிருகக்காட்சி ...

Read More »