அவுஸ்ரேலியாவின் ட்ரீம்வர்ல்ட் (Dreamworld) கேளிக்கைத் தலத்தில் ஏற்பட்ட விபத்தில், அதிர்ஷ்டவசமாக இரு சிறுவர்கள் தப்பிப் பிழைத்ததாக அந்நாட்டுப் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அந்தச் சம்பவத்தில் 4 பேர் மாண்டனர்.அதிவேகமாக ஓடும் செயற்கை ஆற்று படகுப் பயணத்தின்போது சம்பவம் ஏற்பட்டது.
இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதை கண்காணிப்புக் கேமரா பதிவுகள் காட்டின. ஒரு படகில் இருந்த அந்த இரு சிறுவர்கள் தூக்கி எறியப்பட்டதாகப் காவல்துறையினர் கூறினர்.
கோல் கோஸ்ட்டில் அமைந்துள்ள ட்ரீம்வர்ல்ட் உல்லாசப் பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal