வெண்பனி தேசமென செல்லமாக அழைக்கப்படும் சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது.
சொலத்தூண் மாநகரில் பிரபலமான சோலோ மூவி உரிமையாளர் வசி என்பவராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோலோ மூவியில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து தற்சமயம் தனியாக தொழில் புரியும் நீதன் என்பவருடன் நீண்டநாட்களாக முறுகல் நிலையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சோலோ மூவியில் வேலை செய்து தற்சமயம் நீதனுடன் வேலைசெய்யும் தஜி அவர்களும் தங்களின் வியாபாரநிலையத்தின் விசேட விலைக்கழிவு துண்டுப்பிரசுரம் செய்வதற்காக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தவேளையில் அவர்களுக்கு எதிர் புறமாக இருந்த ;இனியா உணவகத்திலிருந்து வந்த வசி இந்த இடத்தில (சொலத்துாண்) நீங்கள் விலைக்கழிவு போடமுடியாது என வாய்த்தகராறில் தொடங்கி கைகலப்புவரை சென்றுள்ளார். இதனை தடுக்க முற்ப்பட்ட அங்கிருந்த இளையோருடனும் தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார். மேற்தளத்தில் அவருக்கு சொந்தமான கடை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
5 நிமிடம் கழித்து இவர்களை நோக்கி வந்தவர் தனது இடுப்பில் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கியுள்ளார்.
வவுனியா நொச்சிமோட்டையை சொந்த இடமாக கொண்ட கார்த்திக் வயது 29 என்பவருக்கு கழுத்து பகுதில் சுடப்பட்டு நிலத்தில் விழுந்ததும் அவரின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டபோது தடுக்க முற்பட்ட தஜியை நோக்கியும் சுடத்தொடங்கியுள்ளார் இருந்தும் அதிஸ்டவசமாக அவர்மீது எந்த குண்டுகளும் படவில்லை. அதைத்தொடர்ந்து அங்குள்ள இளைஞர்கள் மீதும் வெறித்தனமாக சுட்டுள்ளார். கடைக்குள் நுழைந்து நீதனுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி சுட முற்பட்டபோது துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்தமையால் அதிஸ்டவசமாக நீதன் உயிர் தப்பிவிட்டார். இருப்பினும் கடையை அடித்து சேதப்படுத்திவிட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே தப்பியோடி தலைமறைவாகிவிடடார்.
பலத்த காயங்களோடு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கார்த்தி நேற்று இரவு(புதன் கிழமை) உயிரிழந்துள்ளார். அதேவேளை தலைமறைவான குற்றவாளி சோலோ வசி கைத்துப்பாக்கியுடன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும் சம்மந்தப்பட்டவரிடம் விசாரணை நடந்துவருவதாகவும் மேலதிக விபரங்கள் விரைவில் வெளிவிடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal
