உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமை அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பான் என்ற பெண் உராங்குட்டானுக்கு கிடைத்திருக்கிறது.
அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்ரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பான் மிக வயதான உராங்குட்டான் என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
மலேசியா நாட்டில் 1956-ம் ஆண்டு பிறந்த பான் அங்குள்ள சுல்தான் ஜோகூர் என்ற மிருகக்காட்சி சாலையிலிருந்து 1968-ம் ஆண்டு இந்த பெர்த் மிருகக்காட்சி சாலைக்கு அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.
பொதுவாக உராங்குட்டான் வகை குரங்குகள் 50 வயதுக்கு மேல் உயிர் வாழாது என்பதால் பானின் இந்த பிறந்த நாளை பெர்த் மிருககாட்சி ஊழியர்கள் விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.
இந்த உராங்குட்டான் இன்னும் 10 ஆண்டுகள் உயிர்வாழும் என மிருகக்காட்சி ஊழியர்கள் கணித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal