அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்மீத் அலீஷீர் என்ற பேருந்து ஓட்டுநர் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
பிரிஸ்பேனில் பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் மன்மீத், பேருந்து ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒருவர் எரி திரவம் ஒன்றை மன்மீத் மீது ஊற்றியுள்ளார். அடுத்த கணமே, தீக்குச்சியைக் கிழித்து அவர் மீது வீசிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதில் மன்மீத் அந்த இடத்திலேயே தீயில் கருகி பலியாகியுள்ளார்.
அப்போது, பேருந்தில் இருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தீ பேருந்து முழுவதும் பரவுவதற்குள் அனைத்து பயணிகளும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
ஒட்டுநரை தீயிட்டுக் கொழுத்தியவர் எதற்காக அந்த வெறிச்செயலில் இறங்கினார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Indian-origin, bus driver, burnt alive, Australia, அவுஸ்ரேலியா, பேருந்து ஓட்டுநர், பஸ், இந்தியர், எரித்துக் கொலை, பிரிஸ்பேன்
Eelamurasu Australia Online News Portal