3 நிமிடத்தில் 122 செல்பிக்கள் எடுத்து அமெரிக்க பாடகர் டோனி வால்பெர்க் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
ஸ்மார்ட் போன்களின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைமீது நின்று செல்பி, ஆபத்தான இடங்களில் செல்பி என விதவிதமாக செல்பி எடுத்து உலகளவில் பலர் புகழ்பெற்று வருகின்றனர்.
இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே அதிகபட்ச உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் டோனி வால்பெர்க் 3 நிமிடங்களில் 122 செல்பி எடுத்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
தனது குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து டோனி எடுத்த செல்பி சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Eelamurasu Australia Online News Portal