செய்திமுரசு

லிசாவுக்கு நேர்ந்த துயரத்தை நினைத்தால் திகிலாக இருக்கிறது!

மூன்று வாரங்களுக்கு முன்பு காணாமல் போன 25 வயது ரேடியோலஜி மாணவி லிசா தெரிஸ், அமெரிக்காவின் அலபாமா காட்டில் கண்டுபிடிக்கப்பட்டார். “நான் அந்த வழியாக கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். அப்போது புதர்களுக்குப் பின்னால் ஏதோ விலங்கு அசைவதுபோல் தோன்றியது. மானாக இருக்கும் என்று நினைத்து, ஆர்வமாகத் தேடிச் சென்றேன். அங்கே ஒரு பெண் அழுக்காகவும் ஆடையின்றியும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் ஓட ஆரம்பித்தார். அவரைத் துரத்திச் சென்று பிடித்தேன். மெலிந்த உடல் முழுவதும் பூச்சிக்கடிகள். சிக்குப் பிடித்த தலைமுடி. நகங்களில் அழுக்கு. மிரட்சியான ...

Read More »

பயங்கரவாத தாக்குதலில் மூன்று முறை உயிர் தப்பிய பெண்!

இந்த வருடம் இடம்பெற்ற மூன்று பயங்கரவாத தாக்குதல்களின் போது, சம்பவ இடங்களில் இருந்து உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மூன்று நாடுகளின் மூன்று இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது குறித்த பெண் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரத்தை சேர்ந்த 26 வயதுடைய Julia Monaco என்ற பெண்னே இவ்வாறு உயிர் தப்பியுள்ளார். பார்சிலோனாவில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போதும் Julia Monaco ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளார். பார்சிலோனா ரம்பிலாஸ் பகுதியில் உள்ள கடை ...

Read More »

கடற்படையின் புதிய தளபதியாக தமிழர் நியமனம்..!

கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கடற்படையின் 21 ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தற்போது கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவர் பிரதான தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கான அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடருக்கான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்ட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வரும் செப்டமர் 17ம் திகதி முதல் அக்டோபர் 11ம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அவுஸ்ரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்வில் இருந்த அவுஸ்ரேலிய அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் ஃப்ளாக்னர், நாதன் நைல் அணிக்கு திரும்பி உள்ளனர்.  முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஸ்டார்க் ...

Read More »

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை! – இந்தியா – அவுஸ்ரேலியா மோதல்!

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் அவுஸ்ரேலியா மோதவுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நியூஸிலாந்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் 16 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் இந்தியா இடம்பெற்றுள்ள ‘பி’ பிரிவில் அவுஸ்ரேலியா, ஜிம்பாப்வே, பாப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜனவரி 13-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில்அவுஸ்ரேலிய அணியை எதிர்த்து இந்தியா ...

Read More »

வேலூர் சிறையில் முருகன் ஜீவசமாதிக்கு தயார்!

ராஜீவ்காந்தி கொலை தொடபுடைய  முருகன், இன்று ஜீவசமாதி அடையப் போவதாக கூறியுள்ள நிலையில் அவரை சிறையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். வேலூர் சிறையில்  அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலையாளி முருகன், இன்று(18) ஜீவசமாதி அடையப் போவதாக கூறியுள்ள நிலையில் அவரை ஜெயில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதிகளாக முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை ...

Read More »

அவுஸ்ரேலிய நாடாளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பர்தா அணிந்து வந்ததால் பரபரப்பு

அவுஸ்ரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பவுலின் ஹன்சன் பர்தா அணிந்து அணிந்து வந்தது பிற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவுஸ்ரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக பவுலின் ஹன்சன் என்ற பெண் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு நாடாளுமன்ற செனட் சபையின் உறுப்பினரும் ஆவார். இந்த கட்சி அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா என்று அழைக்கப்படுகிற முகத்திரை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், பவுலின் ஹன்சன் பாராளுமன்ற ...

Read More »

புதிய $10 நோட்டு பாவனைக்கு வருகிறது!

அவுஸ்ரேலியாவில் புதிய 10 டொலர் நாணயத்தாள்/நோட்டு எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி முதல் புழக்கத்திற்கு வரும் என ஆளுநர் Philip Lowe தெரிவித்துள்ளார். கடந்த வருடம் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 5 டொலர் நோட்டுக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 டொலர் நோட்டுக்கள் வெளியிடப்படுகின்றன. பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் இலகுவாக அடையாளம் காணும் வகையிலும், போலி நோட்டுக்களை அச்சடிக்க முடியாதவாறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடனும் இப்புதிய 10 டொலர் நோட்டு வெளியிடப்படுகின்றது. எந்த சிக்கல்களுமின்றி புதிய நோட்டுக்கள் மக்கள் பாவனைக்கு வரும்வகையில், பணம் பெறும் இயந்திரங்களில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதவகையில் உயர்வடைந்துள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. தற்போது நாடு முழுவதும் வழக்கமாக புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. இது அமெரிக்காவின் தேசியளவில் புகைப்பிடிப்போர் வீதத்தைவிட அதிகமாகும். அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக சிகரெட் மீது அதிகளவு வரி, plain packaging மற்றும் புகைப்பிடித்தலுக்கெதிரான பிரச்சாரங்கள் என, பல வழிகளிலும் அரசு முயற்சித்துவரும் நிலையில், புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010 க்கும் 2013 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தி 17 ஆயிரத்தால் குறைவடைந்த போதும், இதன் பின்னரான ...

Read More »

மெல்பேர்ன் 7வது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடம்!

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களில் மெல்பேர்ன் ஏழாவது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது. 100 க்கு 97.5 புள்ளிகள் மெல்பேர்னுக்கு கிடைத்துள்ளன. The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தரப்படுத்தியதில் மெல்பேர்ன் நகரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரமும் மூன்றாவது இடத்தில் கனடாவின் வான்கூவர் நகரமும் நான்காவது இடத்தில் ரொறன்டோ நகரமும் காணப்படுகின்றன. அடிலெய்ட் ஐந்தாவது இடத்தை தக்க ...

Read More »