பயங்கரவாத தாக்குதலில் மூன்று முறை உயிர் தப்பிய பெண்!

இந்த வருடம் இடம்பெற்ற மூன்று பயங்கரவாத தாக்குதல்களின் போது, சம்பவ இடங்களில் இருந்து உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

மூன்று நாடுகளின் மூன்று இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது குறித்த பெண் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.

அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரத்தை சேர்ந்த 26 வயதுடைய Julia Monaco என்ற பெண்னே இவ்வாறு உயிர் தப்பியுள்ளார்.

பார்சிலோனாவில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போதும் Julia Monaco ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளார்.

பார்சிலோனா ரம்பிலாஸ் பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு தனது நண்பருடன் இந்த பெண் சென்ற போது வேகமாக வந்த வான்(van) ஒன்று பாதசாரிகள் மீது மோதியது.

குறித்த பெண் சந்திக்கும் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இந்த வருடத்தின் கடந்த 3 மாதங்களுக்குள் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற மூன்று பயங்கரவாத சம்பவங்களின் போதும் அவர் அந்த இடங்களில் இருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகமொன்றிற்கு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் தனது நண்பர்களுடன் லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதி ஒருவர் கத்தியுடன் வந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக குத்தும் போதும் இந்த பெண் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.

அதனை தொடர்ந்து பரிசில் பொலிஸ் அதிகாரிகள் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளும் இடத்திலும் இந்த பெண் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

“எனக்கு வீட்டிற்கு செல்ல தோன்றவில்லை என குறித்த பெண் இன்று காலை தெரிவித்துள்ளார். இங்கிருந்து என்ன நடக்கின்றது என பார்க்கவே தோன்றுகின்றது.

நான் இந்த பகுதியில் எதை பார்வையிட வந்தேனோ அதை பார்த்து விட்டு தான் செல்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பார்சிலோனா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் மூவர் அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)