கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் 21 ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தற்போது கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவர் பிரதான தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal