அவுஸ்ரேலியாவில் புதிய 10 டொலர் நாணயத்தாள்/நோட்டு எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி முதல் புழக்கத்திற்கு வரும் என ஆளுநர் Philip Lowe தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 5 டொலர் நோட்டுக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 டொலர் நோட்டுக்கள் வெளியிடப்படுகின்றன.
பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் இலகுவாக அடையாளம் காணும் வகையிலும், போலி நோட்டுக்களை அச்சடிக்க முடியாதவாறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடனும் இப்புதிய 10 டொலர் நோட்டு வெளியிடப்படுகின்றது.
எந்த சிக்கல்களுமின்றி புதிய நோட்டுக்கள் மக்கள் பாவனைக்கு வரும்வகையில், பணம் பெறும் இயந்திரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.

இதேவேளை ஆஸ்திரேலியாவின் இரு பிரபல எழுத்தாளர்களான Dame Mary Gilmore , AB ‘Banjo’ Paterson ஆகியோரின் புகைப்படங்கள் இப்புதிய நோட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal