மெல்பேர்ன் 7வது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடம்!

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களில் மெல்பேர்ன் ஏழாவது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது. 100 க்கு 97.5 புள்ளிகள் மெல்பேர்னுக்கு கிடைத்துள்ளன.

The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தரப்படுத்தியதில் மெல்பேர்ன் நகரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரமும் மூன்றாவது இடத்தில் கனடாவின் வான்கூவர் நகரமும் நான்காவது இடத்தில் ரொறன்டோ நகரமும் காணப்படுகின்றன.

அடிலெய்ட் ஐந்தாவது இடத்தை தக்க வைத்துள்ள அதேநேரம் பேர்த் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. சிட்னி 11வது இடத்தில் காணப்படுகின்றது.

liveable