இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கான அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடருக்கான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்ட்டுள்ளது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வரும் செப்டமர் 17ம் திகதி முதல் அக்டோபர் 11ம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அவுஸ்ரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்வில் இருந்த அவுஸ்ரேலிய அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் ஃப்ளாக்னர், நாதன் நைல் அணிக்கு திரும்பி உள்ளனர்.  முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஸ்டார்க் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த தொடர் முழுவதும் அவருக்கு ஓய்வுளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் போட்டி தொடருக்கான அவுஸ்ரேலிய வீரர்கள்: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், நாதன் கொல்டர் நைல், பாட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பால்க்னர், ஜோஷ் ஹாஸ்லேவுட், ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹாஸ்லேவுட், ஆடம் சாம்பா

டி20 போட்டி தொடருக்கான அவுஸ்ரேலிய வீரர்கள்: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஜேசன் பெஹ்ரண்டோர்ப், டேனியல் கிறிஸ்டியன், நாதன் கொல்டர் நைல், பாட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ட்விவிஸ் ஹெட், மோயஸ் ஹென்ரிக்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், டிம் பெயின், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா