அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதவகையில் உயர்வடைந்துள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.
தற்போது நாடு முழுவதும் வழக்கமாக புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. இது அமெரிக்காவின் தேசியளவில் புகைப்பிடிப்போர் வீதத்தைவிட அதிகமாகும்.
அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக சிகரெட் மீது அதிகளவு வரி, plain packaging மற்றும் புகைப்பிடித்தலுக்கெதிரான பிரச்சாரங்கள் என, பல வழிகளிலும் அரசு முயற்சித்துவரும் நிலையில், புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2010 க்கும் 2013 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தி 17 ஆயிரத்தால் குறைவடைந்த போதும், இதன் பின்னரான 3 ஆண்டுகளில் மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal