செய்திமுரசு

ஹரப்பா நகரமான தோலாவிரா உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு: யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு

ஹரப்பா நகரமான தோலாவிராவை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித் துள்ளது. சீனாவின் புசோவ் நகரில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 44-வதுகூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்போதுதான் தெலங்கானா மாநிலத்தில் உள்ள காக்கதீய ருத்ரேஸ்வரா கோயிலை (ராமப்பா கோயில்) உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது. தற்போது குஜராத் மாநிலம் கட்ச் பகுதியிலுள்ள மிகப் பழமையான ஹரப்பா நகரமான தோலாவிராவையும் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. உலகின் மிகப் பழமையான நாகரிகமாக சிந்துசமவெளி ...

Read More »

ஆட்சியாளர்கள் நேர்மையாக நடவடிக்கை எடுப்பார்களா?

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள வீட்டில், பணிபுரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி எனும் சிறுமி, தீக்காயங்களுக்கு உள்ளாகி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்தச் சிறுமி, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாகவும் மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. ஒருபுறம், சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி, எரித்துக் கொல்லப்பட்டதாகவும்  ரிஷாட் வீட்டிலும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், சிறுமிக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. மறுபுறம், ரிஷாட்டின் வீட்டுக்கு, சிறுமி வருவதற்கு ...

Read More »

டயகம சிறுமியின் சடலம் பேராதனை செல்லும்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த 16 வயதான  சிறுமி ஹிஷாலினியின் சடலம்,   தோண்டி எடுக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி  முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  இதனை மூன்று சட்ட வைத்தியர்கள் கண்காணிக்கின்றனர். இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சடலம், பலத்த காவல் துறை  பாதுகாப்புக்கு மத்தியில், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்படும்

Read More »

செல்வச்சந்நிதி திருவிழாவுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள்; 100 பேருக்கு மாத்திரம் அனுமதி

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக் களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை பிரதேச செயலகத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி, பொலிஸார் உள்ளிட்டோரின் பங்களிப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: இந்த ஆண்டு பெருந்திருவிழாவை நடத்துவதற்கு அனுமதியில்லை. ஆலய உள் வீதியில் மட்டுமே ...

Read More »

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டது உட்பட 14 கலைப் பொருட்களை திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் தமிழகத்தின் சோழர் காலச் சிலைகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்ட மற்றும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 13 கலைப்பொருட்கள் உட்பட 14 பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதை அருங்காட்சியகம் கண்டறிந்துள்ளது. இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக் மிட்செவிட்ச் கூறும்போது, ‘‘இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கூட்டு முயற்சியால் கலாச்சார ரீதியான பொருட்களை ...

Read More »

குறைந்தளவு பயன் அளிக்ககூடிய சினோவக் தடுப்பூசியை அரசாங்கம் ஏன் பெருமளவில் கொள்வனவு செய்கின்றது?

இலங்கையில் பரவிவரும் டெல்டா வைரசினை கட்டுப்படுத்துவதில் குறைந்தளவு பலன்அளிக்ககூடிய – மிகவும்பெறுமதியான சினோவக் தடுப்பூசியை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து சுகாதார துறையை சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் . 13மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது. சினோவக் தடுப்பூசி 15 அமெரிக்க டொலர்களிற்கு விற்பனை செய்யப்படுகின்றது இது இலங்கையை பொறுத்தவரை மிகவும் பெரியதொகை என சுகாதாரதுறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஏனைய தடுப்பூ{சிகள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதையும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை மருத்துவர்கள் இந்த தடுப்பூசியின் செயல்திறன் ...

Read More »

யாழில் அரச அலுவலகம் ஒன்றில் பெண் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அதே அலுவலகத்தில் பணியாற்றும் இளம்பெண் உத்தியோகத்தரை கத்தியால் தலையிலும் முகத்திலும் குத்திவிட்டு, குளியல் அறைக்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் நேற்று (28) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் ஒரு தலைக் காதலினாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் தெரியவருகிறது. அலுவலகத்தில் வைத்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, மலசலகூடத்துக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக்கொண்டு அந்த உத்தியோகத்தர் இருந்து விட்டார். அலுவலக ஊழியர்கள், காயப்பட்ட பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவர் ...

Read More »

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் மீண்டும் இணைவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டு இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என அதனை மறுத்துள்ளார். சமரவீர மீண்டும் கட்சியில் இணைய ஆர்வமாக இருந்தால், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜெயவிக்ரம நேற்று தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மங்கள சமரவீர தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் 8 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ள அகதிகள்

“ஒவ்வொரு நாளும் எனது நிலைமை மோசமாகவே இருக்கிறது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை,” எனக் கூறும் சாஹப் உடின் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரி நவுருத்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 108 அகதிகளில் ஒருவர். அதே போன்று பப்பு நியூ கினியா தீவிலும் 125 அகதிகள் சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அரசால் படகு வழியாக வரும் அகதிகள் தொடர்பான கொள்கையின் கீழ் இத்தீவுகளில் சிறை வைக்கப்பட்டவர்கள். கடல் வழியாக தஞ்சமடையும் எந்த அகதிகளும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட ...

Read More »

தஞ்சம்கோரிய மகன் படுகொலை: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்

2014 மனுஸ்தீவு கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் ஆஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டதாக தஞ்சக்கோரிக்கையாளரின் பெற்றோர் வழக்குத் தொடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2013ல் ஆஸ்திரேலியாவை படகு வழியாக அடைய முயன்ற 23 வயது ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் Reza Berati மனுஸ்தீவில் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர், அங்கு நடந்த கலவரத்தின் போது முகாம் பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இவர் கொலைச் செய்யப்பட்டது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நடந்த வழக்கில் பாதுகாப்பு ...

Read More »