முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் சடலம், தோண்டி எடுக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை மூன்று சட்ட வைத்தியர்கள் கண்காணிக்கின்றனர்.
இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சடலம், பலத்த காவல் துறை பாதுகாப்புக்கு மத்தியில், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்படும்
Eelamurasu Australia Online News Portal