இலங்கையில் பரவிவரும் டெல்டா வைரசினை கட்டுப்படுத்துவதில் குறைந்தளவு பலன்அளிக்ககூடிய – மிகவும்பெறுமதியான சினோவக் தடுப்பூசியை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து சுகாதார துறையை சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் .
13மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
சினோவக் தடுப்பூசி 15 அமெரிக்க டொலர்களிற்கு விற்பனை செய்யப்படுகின்றது இது இலங்கையை பொறுத்தவரை மிகவும் பெரியதொகை என சுகாதாரதுறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஏனைய தடுப்பூ{சிகள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதையும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை மருத்துவர்கள் இந்த தடுப்பூசியின் செயல்திறன் மிகவும் குறைவானது என தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவக் தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அவசர பயன்பாட்டிற்காக அனுமதித்துள்ளபோதிலும் இந்த தடுப்பூசி டெல்டா வைரசிற்கு எதிராக எவ்வளவு தூரம் பயனளிக்க கூடியது என்பதுகுறித்து எந்த தரவுகளும் -புள்ளிவிபரங்களுமில்லை.
சிலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மாத்திரமே உள்ளன என தெரிவிக்கும் உள்ளுர் நிபுணர்கள் அந்த ஆய்வு தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து திருப்திகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது ஆனால் டெல்டா கொரோனா வைரசிற்கு எதிராக இந்த தடுப்பூசி எவ்வாறு செயற்படும் என்பது குறித்து அந்த ஆய்வில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
டெல்டா கொரோனாh வைரசிற்கு எதிராக சினோவக் எவ்வாறு செயறப்டுகின்றது என்பது குறித்த பாரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகள் அல்லது நிஜ உலக பயன்பாடுகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் புள்ளிவிபரங்கள் எதுவுமில்லாதததும் குறிப்பிடத்தக்கது.
தாங்கள் தெரிவித்த ஆலோசனைகள் தங்களின் கண்டுபிடிப்புகள் தேசிய மருந்துகள்ஒழுங்குபடுத்தும்அதிகார சபையால் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொவிட் மருந்துகள் தொடர்பான ஆலோசனை குழுவிலிருந்து 3 மருத்துவர்கள் ஏற்கனவே பதவி விலகியுள்ளனர்.
சினோவக்கினை அவசர பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பிலேயே இவர்கள் பதவிவிலகியுள்ளனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் உட்பட ஏனைய தடுப்பூசிகள் தொடர்ச்சியா கிடைத்து வருவதால் சினோவக்கினை கொள்வனவு செய்யவேண்டிய அவசியமில்லை என கொரோனா மருந்துகள் தொடர்பிலான ஆலோசனை குழுவின் எட்டு உறுப்பினர்களும் ஏகோபித்த குரலில் தெரிவித்துள்ளனர்.
ஆலோசனை குழுவின் நான்கு உறுப்பினர்கள் இலங்கை சிறிய எண்ணிக்கையிலான சினோவாக்கினை கூட கொள்வனவுசெய்யக்கூடாதுஎன தெரிவித்துள்ள அதேவேளை சிறிய எண்ணிக்கையிலான சினோவக்கினை கொள்வனவு செய்து பொதுமக்களிற்கு வழங்கலாம் என ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தற்போதுஇலங்கைக்கு தடுப்பூசி தொடர்ந்தும் கிடைப்பதால் சினோவக்கினை கொள்வனவு செய்யவேண்டிய அவசியமில்லை என எட்டு உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை சுகாதார நிபுணர்களிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் 13 மில்லியன் டோஸ் சினோவக்கினை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என டெய்லி மிரரி;ற்கு தகவல் கிடைத்துள்ளது
.
இது ஒருமோசமான நடவடிக்கை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சுகாதார அதிகாரியொருவர் நாட்டில் டெல்டா வைரசின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் கேள்விக்குரிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகின் ஏனைய நாடுகளில் சினோவக்தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களி;ன் நோய் எதிர்ப்பு சக்தி ஆறுமாதத்தில் குறைவடைந்துள்ளது இதன் காரணமாக அவர்கள் மூன்றாவது பூஸ்டரை செலுத்திக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர் எனவும் சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal