அவுஸ்ரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மலபார் கூட்டுப்படை போர் ஒத்திகை பயிற்சிற்கு இந்தியா ஏற்னவே இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், மறுப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்துசமுத்திர எல்லையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கடல்தள போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மலபார் கூட்டு கடற்படை போர் ஒத்திகை என பெயரிடப்பட்டது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இந்தப் பயிற்சியானது இந்துசமுத்திர கடல் பகுதியின் கிழக்கே பசுபிக் ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலியாவில் அதிகமாக மது அருந்துவது யார் ?
அவுஸ்ரேலியாவில் மது அருந்துவது, போதைப்பொருள் மற்றும் புகைத்தல் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபடுவது யார் என அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆய்வில் 12 முதல் 24 வயது வரையானோர் மிகக் குறைந்தளவே மது அருந்துகின்றனர் என்றும் அதேவேளை 50 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்டோர் சுமார் இரு மடங்கு அதிகம் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது. மேலும் பெண்களைவிட ஆண்கள் இரண்டு மடங்கு அதிகம் மது அருந்துவதாக குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.
Read More »அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தகவல் பரிமாற்றம் + கேள்வி பதில்
புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் கொண்டுவந்திருந்தது. இதுவரை விண்ணப்பிக்காத புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய முடிவுகள் துரிதமாக எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. இவை பற்றிப் பேசுவதற்காக அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் குறித்து விளக்கம் தரவும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் என சிட்னியின் பிரபல சட்ட ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பட்டிமன்றமாக மாறிவிட்டது!
காணாமல் ஆக்கப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஐயப்படுவதும், இது விடயத்தில் இவரது விரல் தமக்குப் பின்னால் வந்த ஜனாதிபதி மகிந்தவை நோக்கி நீளுவதும் சாதாரணமான ஒரு செய்தியாகப் பார்க்க முடியாதது. காணாமற் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நூறு நாட்களைத் தாண்டிவிட்டது. இதனை ஒரு விளையாட்டாக அரசாங்கம் கருதி வருகின்றதென்றால், அவர்கள் மொழியில் ஒரு ஷசெஞ்சரி போடப்பட்டுவிட்டது எனலாம். நூறாவது நாள் போராட்டத்தையொட்டி ஏ-9 பிரதான வீதியை மறித்த மக்கள் அன்றைய நாளை குத்துப் போராட்டமாக ...
Read More »அவுஸ்ரேலியா- சிறிலங்கா விமானச்சேவை அக்டோபர் 29ம் நாள் ஆரம்பம்!
கொழும்புக்கும் மெல்போர்ணுக்குமிடையில் நேரடி விமான சேவைக்கு ஏர்பஸ் A330-200 விமானங்ககளைப் பயன்படுத்தப் போகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர்பஸ் A330-200 களுடன் மெல்பேர்ண்-கொழும்பு விமான சேவையை அக்டோபர் மாதம் முதல் ஆரம்பித்த பின்னர், ஆஸ்திரேலியாவிற்கும் இலங்கைத் தீவிற்கும் இடையில் பயணம் செய்பவர்கள் நேரடியாகப் பயணிக்க முடியும். ஆஸ்திரேலியாவில் வாழும் அதிகப்படியான இலங்கையர்கள் விக்டோரிய மாநிலத்தில் வசிப்பதால், மெல்பேர்ணில் இருந்து இந்த சேவையை ஆரம்பிக்கப் போவதாகவும் இந்த ஆண்டு, அக்டோபர் 29ம் நாள் சேவை ஆரம்பமாகிறது என்றும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி கேப்டன் ...
Read More »அவுஸ்ரேலியா சிறிலங்காவுக்கு 10 படகுகளை வழங்கியுள்ளது!
வெள்ளத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவுஸ்ரேலியா 10 இறப்பர் படகுகளையும், வெளியிணைப்பு இயந்திரங்களையும் வழங்கியுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்கன் விமானசேவை விமானத்தின்மூலம் இவ்வுதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்திற்கருகிலுள்ள ரங்கலை கடற்படைத் தளத்தில் வைத்து அவுஸ்ரேலியத் தூதுவர் பிறைஸ் ஹட்சிசனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. உடனடியாகவே இந்தப் படகுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Read More »அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பேட்டிங்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று (2) நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. மார்டின் கப்தில், 2. ரோஞ்சி, 3. கேன் வில்லியம்சன், 4. ராஸ் டெய்லர், 5. ப்ரூம், ...
Read More »யாழ்.நூலக எரிப்பு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல்! நிகழ்வு
யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (1) மாலை 6.00 மணியளவில் யாழ். பொது நூலகம் முன்பாக இடம்பெற்றது. அந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்மகளிர் அணி பொறுப்பாளர் பத்மினி சிதம்பரநாதன் , கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். நினைவு பகிர்வினை ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் ஜோதிலிங்கம், ...
Read More »மனோத் மார்க்ஸ் Instagram கணக்கில் இறுதியாக பதிவிட்டவை!
300 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பிய இலங்கையர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த இலங்கையர் விமானத்தில் ஏறுவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர் சிகார் மற்றும் கெங்ஸ்டர் ரெப் இசையை ரசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். புதன்கிழமை இரவு 11.11 மணியளவில் MH128 என்ற விமானம் விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சற்று நேரத்தில் மனோத் மார்க்ஸ் என்ற இலங்கையர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த நிலையில் விமானத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக ...
Read More »3 குழந்தைகளை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தாயார்!
அவுஸ்ரேலியா நாட்டில் 3 குழந்தைகளை ஏரியில் காருடன் மூழ்கடித்து கொலை செய்த தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தென்சூடான் நாட்டை சேர்ந்த Akon Guode(37) என்ற பெண் அவுஸ்ரேலியாவில் குடியேறி மெல்போர்ன் நகரில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு வயது, 4 வயதில் இரண்டு குழந்தைகள் மற்றும் 6 வயது என 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு 4 குழந்தைகளையும் காரில் ஏற்றிக்கொண்டு தாயார் அவரே ஓட்டிச்சென்றுள்ளார். ஏரி ஒன்றிற்கு சென்ற அவர் காரை தண்ணீரில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal