வெள்ளத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவுஸ்ரேலியா 10 இறப்பர் படகுகளையும், வெளியிணைப்பு இயந்திரங்களையும் வழங்கியுள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்கன் விமானசேவை விமானத்தின்மூலம் இவ்வுதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இவை நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்திற்கருகிலுள்ள ரங்கலை கடற்படைத் தளத்தில் வைத்து அவுஸ்ரேலியத் தூதுவர் பிறைஸ் ஹட்சிசனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
உடனடியாகவே இந்தப் படகுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal
