அவுஸ்ரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
மலபார் கூட்டுப்படை போர் ஒத்திகை பயிற்சிற்கு இந்தியா ஏற்னவே இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், மறுப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்துசமுத்திர எல்லையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கடல்தள போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மலபார் கூட்டு கடற்படை போர் ஒத்திகை என பெயரிடப்பட்டது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தப் பயிற்சியானது இந்துசமுத்திர கடல் பகுதியின் கிழக்கே பசுபிக் கடல் எல்லை வரை தொடர்ந்திருந்தமையால், குறித்த பயிற்சியானது சீனாவை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாகவும், ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆதிக்கத்தை மீள் பிரவேசிக்க செய்யும் செயற்பாடு இது எனவும் சீனா தொடர்ந்து சாடிவந்தது.
இந்நிலையிலேயே எதிர்வரும் ஜூலை மாதம் வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் இடம்பெறவுள்ள மலபார் பயிற்சியில் பங்குபற்றுவதற்கு அவுஸ்திரேலியா கடற்படை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அனால் அவுஸ்திரேலியாவின் இணைவு அயல் நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனக்கூறி இந்தியா அவுஸ்திரேலியாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்தியா உணர்ந்துள்ளதாகவும், அதற்காக தாம் நன்றி கூறுவதாகவும் சீனா கருத்து வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.