அவுஸ்ரேலியா நாட்டில் 3 குழந்தைகளை ஏரியில் காருடன் மூழ்கடித்து கொலை செய்த தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தென்சூடான் நாட்டை சேர்ந்த Akon Guode(37) என்ற பெண் அவுஸ்ரேலியாவில் குடியேறி மெல்போர்ன் நகரில் வசித்து வந்துள்ளார்.
இவருக்கு ஒரு வயது, 4 வயதில் இரண்டு குழந்தைகள் மற்றும் 6 வயது என 4 குழந்தைகள் இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு 4 குழந்தைகளையும் காரில் ஏற்றிக்கொண்டு தாயார் அவரே ஓட்டிச்சென்றுள்ளார்.
ஏரி ஒன்றிற்கு சென்ற அவர் காரை தண்ணீரில் மூழ்க வைத்துவிட்டு வெளியேறியுள்ளார்.
கார் தண்ணீரில் மூழ்கவும் உள்ளே இருந்த 3 குழந்தைகள் மூச்சடைத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளன, அதிர்ஷ்டவசமாக 6 வயது குழந்தை தப்பி வெளியேறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தாயார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தாயாருக்கு மனநிலை சரியில்லை என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தென் சூடான் நாட்டில் தாயார் முன்னிலையில் அவர் கணவர் கொடூரமாக கொல்லப்பட்டதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், குழந்தைகளை கொன்றதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, பெற்ற குழந்தைகளை கொன்றதற்காக 26 தாயாருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், 20 ஆண்டுகள் வரை பரோலில் வெளியே விடக்கூடாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.