அவுஸ்ரேலியாவில் மது அருந்துவது, போதைப்பொருள் மற்றும் புகைத்தல் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபடுவது யார் என அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஆய்வில் 12 முதல் 24 வயது வரையானோர் மிகக் குறைந்தளவே மது அருந்துகின்றனர் என்றும் அதேவேளை 50 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்டோர் சுமார் இரு மடங்கு அதிகம் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.
மேலும் பெண்களைவிட ஆண்கள் இரண்டு மடங்கு அதிகம் மது அருந்துவதாக குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.