அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று (2) நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மார்டின் கப்தில், 2. ரோஞ்சி, 3. கேன் வில்லியம்சன், 4. ராஸ் டெய்லர், 5. ப்ரூம், 6. நீஷம், 7. கோரி ஆண்டர்சன், 8. சான்ட்னெர், 9. மில்னே, 10. சவுத்தி, 11. ட்ரென்ட் போல்ட்.

அவுஸ்ரேலிய வீரர்கள் விவரம்:-

1. ஆரோன் பிஞ்ச், 2. டேவிட் வார்னர், 3. ஸ்மித், 4. ஹென்றிக்ஸ், 5. மேக்ஸ்வெல், 6. ட்ராவிஸ் ஹெட், 7. வடே, 8. ஹாஸ்டிங்ஸ், 9. மிட்செல் ஸ்டார்க், 10. கம்மின்ஸ், 11. ஹசில்வுட்.