நுட்பமுரசு

விண்வெளி தொலைநோக்கி கட்டுமானப் பணி நிறைவு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியின் கட்டுமான பணியை தற்போது நிறைவு செய்துள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஞ்சு கயானாவிலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கட்டுமான பணி நிறைவு பெற்றது மிகபெரிய வெற்றியாகக் கருதப்படுவதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஜான் மாதர் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சிறப்பு ...

Read More »

அமெரிக்காவில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் செவ்ரோலட் போல்ட் என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தாண்டு இறுதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது 360 கி.மீ., வரை ஓடும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள செவ்ரோலட் போல்ட் வகை கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 360 கி.மீ., வரை ஓடும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது. இதனால் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடக் கூடிய கார்களை காட்டிலும் செலவு குறையும் என்று ...

Read More »

வைரமாக மாற்றப்படும் மனித அஸ்தி

மரணமடைந்த ஒருவரின் அஸ்தியை, நீர்நிலைகளில் கரைப்பது உலக வழக்கம். ஆனால் சிலர், மனித அஸ்தியை ஆபரணமாக்கி, அழகு பார்க்க விரும்புகின்றனர். காரணம் என்ன?  அழகழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வைரக் கற்கள்.இவை மண்ணில் விளைந்தவை அல்ல. மனித அஸ்தியைக் கொண்டு தட்டித் தட்டிச் செய்யப்பட்ட வைரக் கற்கள்.மண்ணில் புதையுண்ட கரி வைரமாக மாற பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம். ஆனால் மனித அஸ்தி வைரமாக உருமாற்ற சில வாரங்கள் போதும்.முதலில் மனித அஸ்தியிலிருந்து கரி கவனமாகப் பிரித்தெடுக்கப்படும். பிறகு அது இந்த மின்னுலையில் வைக்கப்படும். 1400 டிகிரி ...

Read More »

அவுஸ்ரேலிய உணவு கலை நிபுணரின் கேக்கை அச்சிடும் 3டி இயந்திரம்!

ஸ்டார் டிரெக்’ என்ற அறிவியல் புனை கதைத் தொடரில், விரும்பிய உணவு வகைகளை வார்த்தெடுக்கும் இயந்திரம் அடிக்கடி வரும். அதே போல, ஒரு இயந்திரத்தை அவுஸ்ரேலியாவை சேர்ந்த, உணவு கலை நிபுணர் ரேனால்ட் பொயர்னோமோ உருவாக்கியிருக்கிறார். முப்பரிமாண அச்சியந்திர வகையை சேர்ந்த இந்த இயந்திரம், பிரான்ஸ் நாட்டு திருமணங்கள் மற்றும் விழாக்களில் பரிமாறப்படும், ‘குரோக்வெம்போச்’ என்ற உணவு வகையை மட்டுமே அச்சு அசலாக அச்சிட்டுத் தருகிறது. அடுமனையில் தயாராகும் குரோக்வெம்போச், குட்டி, குட்டி பன்களை ஒன்றின் மேல் ஒன்றாக கூம்பு வடிவில் அடுக்கியது போல் ...

Read More »

விஞ்ஞானிகள் இருவருக்குப் புகழ்மிக்க “அனைத்துலக நீர்வள ஆய்வுப் பரிசு”

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இருவருக்குப் புகழ்மிக்க “அனைத்துலக நீர்வள ஆய்வுப் பரிசு” வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்கள் அந்தப் பரிசைப் பெறுவது இதுவே முதன்முறை. நீர்வளத்துக்கான இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸிஸ் அனைத்துலகப் பரிசின் கீழ் வழங்கப்படும் ஐந்து விருதுகளில் அதுவும் ஒன்று. ஈராண்டுக்கு ஒரு முறை சவுதி அரேபியா அதனை வழங்குகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் புத்தாக்க வழிகள் குறித்த ஆய்வுகளை அங்கீகரிப்பது அதன் நோக்கம். மாற்று நீர்வளம் குறித்த ஆய்வுக்காக, நன்யாங் பல்கலைப் பேராசிரியர்கள் வாங் ரொங், அந்தொனி ஃபேம் இருவருக்கும் அந்தப் ...

Read More »

அமெரிக்காவின் அவசரசேவை எண் ‘911’-ஐ முடக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்

அமெரிக்கா அரிசோனாவின் அவசர சேவை எண்ணை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய 18 வயது  இந்திய வம்சாவளி இளைஞர் ஹிதேஷ்பாய் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஐபோன் ஆப் டெவலப்பரான ஹிதேஷ், ஐபோன் ஜாவா ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கி ட்விட்டர் மற்றும் இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரிப்ட் லின்க்கை  ஐபோன் பயனர்கள்  கிளிக் செய்தவுடன் தானாக அமெரிக்காவின் அவசர சேவை எண்ணான   ‘911’ க்கு தொலைப்பேசி அழைப்பு செல்வது போல் ப்ரோகிராம் செய்துள்ளார். இதனால், அவசர சேவை எண்ணான ’911’-க்கு தொடர்ந்து  100-க்கும் மேற்பட்ட ...

Read More »

செய்திகளைத் தெரிந்துகொள்ள புதிய வழி !

கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் செய்திகளைத் தெரிந்துகொள்ளக் கஷ்டப்பட வேண்டாம். செய்தித் திரட்டிகள் முதல் செய்திகளைச் சுருக்கமாக வழங்கும் செயலிகள் வரை பல விதமான செய்திச் செயலிகள் இருக்கின்றன. இந்த வரிசையில் மைக்ரோசாஃப்ட்டின் ‘நியூஸ் புரோ’ செயலியும் இணைந்துள்ளது. சோதனை முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டுவரும் ‘மைக்ரோசாஃப்ட் கேரெஜ்’ திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் செய்திச் செயலி வழக்கமான செய்திச் செயலிகளிலிருந்து மாறுபட்டது. எப்படி எனில், இந்தச் செயலி பயனாளிகளிக்கு அவர்கள் பணியாற்றும் துறை தொடர்பான செய்திகளை முன்னிறுத்துகிறது. ஆக, ஒரு ...

Read More »

புளூட்டோவில் இருந்து பூமிக்கு 15 மாதம் கழித்து வந்த தகவல்

புளூட்டோவில் இருந்து நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் அனுப்பிய தகவல் மிகவும் காலதாமதமாக 15 மாதம் கழித்து பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள நவகிரகங்களில் மிக சிறியது புளூட்டோ. இந்த கிரகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு ஆய்வு நடத்திவரும் நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் தகவல்கள் மற்றும் போட்டோக்களை எடுத்துள்ளது. அத் தகவலை கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 14-ந் திகதி அனுப்பி வைத்தது. இத்தகவல் 15 மாதங்களுக்கு பிறகு தான் ...

Read More »

புதிதாக உருவாகும் கோள்!

ஒரு புதிய இளம் கோள் உருவாகிக் கொண்டிருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். இதன் கண்டுபிடிப்பில், பல நாடுகளைச் சேர்ந்த சாதாரண குடிமக்களும் உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கோள் உருவாகும்போது விண் பொருட்கள், துகள்கள் மற்றும் வாயுக்கள் மிதமிஞ்சிய வெப்பத்துடன் ஒரு மையப் பகுதியில் குவிய ஆரம்பிக்கும். பார்ப்பதற்கு நடுவே துளை உள்ள ஒரு வட்டு போல இந்தக் காட்சி இருக்கும். இத்தகைய ஒரு காட்சியைத்தான் சர்வதேச முயற்சியுடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘அஸ்ட்ரோ பிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ்’ என்ற ஆய்விதழில், இந்த இளம் ...

Read More »

உலகின் மிக ஒல்லியான டிஸ்பிளே கொண்ட கணினி

உலகிலேயே மிகவும் ஒல்லியான டிஸ்பிளே கொண்டுள்ள கணினியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ”the Surface Studio AIO”என பெயரிடப்பட்டுள்ள இந்த கணினியில்,12.5 மி.மீட்டர் அளவே உள்ள ஒல்லியான டிஸ்பிளே உள்ளது.இந்த கணினித் திரை 13.5 மில்லியன் பிக்சல் திறன் கொண்டிருப்பதால்,நிறங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும்.இதனால் இந்த கணிணி வீடியோ கிராபர்கள்,புகைப்படக்காரர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  சிக்ஸ்த் ஜெனரேசன் இண்டல் கோர் பிராசசர்,1 டெராபைட் அல்லது 2 டெரா பைட் மெமரி,8 ஜிபி,16 ஜிபி அல்லது 32 ...

Read More »