உலகிலேயே மிகவும் ஒல்லியான டிஸ்பிளே கொண்டுள்ள கணினியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
”the Surface Studio AIO”என பெயரிடப்பட்டுள்ள இந்த கணினியில்,12.5 மி.மீட்டர் அளவே உள்ள ஒல்லியான டிஸ்பிளே உள்ளது.இந்த கணினித் திரை 13.5 மில்லியன் பிக்சல் திறன் கொண்டிருப்பதால்,நிறங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும்.இதனால் இந்த கணிணி வீடியோ கிராபர்கள்,புகைப்படக்காரர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிக்ஸ்த் ஜெனரேசன் இண்டல் கோர் பிராசசர்,1 டெராபைட் அல்லது 2 டெரா பைட் மெமரி,8 ஜிபி,16 ஜிபி அல்லது 32 ஜிபி ராம் போன்ற அம்சங்கள் இந்த கணிணியில் உள்ளன.கணினியின் ஹார்டுவேர் பொருட்களைப் பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
$2999,$3499 மற்றும் $4199 ஆகிய விலைகளில் இந்த கணினிகள் விற்பனைக்கு வர உள்ளன.மடிக்கும் வகையிலான திரை இந்த கணினியில் அமைக்கப்பட்டுள்ளதால்,தரையில் படுக்கைவசமாக வைத்துக் கொண்டு கூட இந்த கணினியை பயன்படுத்த முடியும்.
Eelamurasu Australia Online News Portal