அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் செவ்ரோலட் போல்ட் என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தாண்டு இறுதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது
360 கி.மீ., வரை ஓடும்
புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள செவ்ரோலட் போல்ட் வகை கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 360 கி.மீ., வரை ஓடும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது. இதனால் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடக் கூடிய கார்களை காட்டிலும் செலவு குறையும் என்று கூறுகிறது.
அதிக வசதி
கவர்ச்சியான சீட் அமைப்புகள், கால்களை வசதியாக வைத்துக் கொள்ள அதிக இடவசதி, அதிக தூரம் நிற்காமல் ஓடக் கூடிய திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் வௌிவர இருக்கும் இவ்வகை கார்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று ஜி.எம். நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
விலை ரூ 26 லட்சம்
இந்த புதிய வகை காரின் ஆரம்ப விலை 40,000 அமெரிக்க டாலர்கள் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 27 லட்சம்.