அமெரிக்காவின் அவசரசேவை எண் ‘911’-ஐ முடக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்

அமெரிக்கா அரிசோனாவின் அவசர சேவை எண்ணை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய 18 வயது  இந்திய வம்சாவளி இளைஞர் ஹிதேஷ்பாய் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐபோன் ஆப் டெவலப்பரான ஹிதேஷ், ஐபோன் ஜாவா ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கி ட்விட்டர் மற்றும் இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரிப்ட் லின்க்கை  ஐபோன் பயனர்கள்  கிளிக் செய்தவுடன் தானாக அமெரிக்காவின் அவசர சேவை எண்ணான   ‘911’ க்கு தொலைப்பேசி அழைப்பு செல்வது போல் ப்ரோகிராம் செய்துள்ளார்.

இதனால், அவசர சேவை எண்ணான ’911’-க்கு தொடர்ந்து  100-க்கும் மேற்பட்ட போலி அழைப்புகள் குவிந்து, ஒட்டுமொத்த 911 அவசர சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஹிதேஷை அரிசோனா காவல்துறை கைது செய்து சைபர் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.