அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியின் கட்டுமான பணியை தற்போது நிறைவு செய்துள்ளது.
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஞ்சு கயானாவிலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கட்டுமான பணி நிறைவு பெற்றது மிகபெரிய வெற்றியாகக் கருதப்படுவதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஜான் மாதர் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சிறப்பு
இது ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி போன்று இருந்தாலும் அவற்றைவிட அதிகளவு திறன் கொண்டு விண்வெளியில் இருக்கும் அகசிவப்பு கதிர்களைக் ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் தொலைதூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அமைப்பு
இதில் மொத்தமாக 18 அறுகோண வடிவிலான குவி ஆடிகள் பொருத்தப்படும், 6.5 மீட்டர் அளவுள்ள முதன்மை கண்ணாடியில் ஒலி மற்றும் அதிர்வு சூழல் கண்காணிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.