அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்- பாகிஸ்தான் அணியில் 17 வயது புதுமுக வீரர்

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயமடைந்தார். அவருக்கு பதிலாக 17 வயது புதுமுக வீரர் முகமத் அஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 15-ந்தேதி பிரிஸ்பெனில் தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பதில் 17 வயது புதுமுக வீரர் முகமத் அஸ்கர் ...

Read More »

ஆசிரியர்கள் அகதிகளுக்கு ஆதரவான போராட்டம்

அவுஸ்ரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் பாடசாலை ஆசிரியர்கள் அகதிகளுக்கு ஆதரவான போராட்டமொன்றை எதிர்வரும் வாரம் தொடங்கவிருப்பது பெரும் சர்ச்சையை அரசியல்மட்டத்தில் உருவாக்கியுள்ளது. விக்ரோறிய மாநிலத்தில் – குறிப்பாக மெல்பேர்ண் நகரத்தில் 16 பாடசாலைகளைச் சேர்ந்த 500 வரையான ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய பெருநிலப்பரப்புக்கு அப்பால் தடுப்பு முகாம்களை மூடவேண்டுமென்றும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் வாசகங்கள் பொறித்த மேற்சட்டைகளை அணிந்து இந்த ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும், அகதிகளுக்கு ஆதரவான பரப்புரையையும் விளக்கத்தையும் மாணவர்களுக்கு வழங்குவார்கள் என்றும் இந்தப் போராட்டத்தை ...

Read More »

மெல்பேர்ன்- விக்டோரியா மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் உட்பட விக்டோரியா மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய  தொழிற்பட்டியல்-Skilled Occupation List வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்பட்டியலில் கடந்த வருடமிருந்த 234411 Geologist,  234412 Geophysicist ஆகியன Victorian Visa Nomination Occupation Listsஇலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விக்டோரியா மாநிலத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட முழுமையான புதிய தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனுமொரு தொழிலுக்கு தகுதியானவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு குடிபெயர்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.

Read More »

அவுஸ்ரேலியாவில் சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் நகரில், சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அடிலெய்ட் விமான நிலையத்தில், அவர்கள் இருவரும், சுமார் 520 ஆயிரம் அவுஸ்ரேலிய டாலரைக் கொண்டு சென்றபோது, பிடிபட்டனர். அவர்களில் ஒருவரின் பயணப் பையில் 250 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் இருந்ததைப் போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து, மற்றோர் ஆடவர் அடையாளம் காணப்பட்டார்.அவரின் பயணப் பையில், சுமார் 270 ஆயிரம் அவுஸ்ரேலிய டாலர் இருந்தது தெரிய வந்தது. அவர்களைப் பிடிப்பதற்கு, போலீஸ் மோப்ப நாய் Utana, பேருதவியாக இருந்ததாய், அதிகாரிகள் கூறினர். ...

Read More »

அவுஸ்ரேலியா பல்கலைக் கழகத்தில் மிரட்டல்

ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக் கழகத்தில், வன்முறைச் சம்பவம் பற்றிய மிரட்டல் விடுக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, பல்கலைக் கழக வளாகத்தின் சில கட்டடங்களில் இருந்து, மாணவர்களும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். Victoria மாநிலத்தில் உள்ள, அந்தப் பல்கலைக் கழகத்தில் போலீசார் பாதுகாப்புச் சோதனை நடத்தினர். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தப் பல்கலைக் கழகம் கூறியது. சில நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவிலும், அதன் அண்டை நாடான நியூசிலந்திலும் உள்ள பள்ளிகளுக்கு, வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அண்மை மிரட்டல் விடுக்கப்பட்டது.

Read More »

அதிக சதங்கள் நொறுக்கியஅவுஸ்ரேலிய வீரர்

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய அவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். *அவுஸ்ரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய அவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹைடன் (2007) ஆகியோர் ஒரு ஆண்டில் ...

Read More »

சக வீரரை விமர்சித்த அவுஸ்ரேலிய ஆல்–ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம்

அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான மேக்ஸ்வெல் சமீபகாலமாக பேட்டிங்கில் ஜொலிக்காததால் அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை. இலங்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்து நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான அவுஸ்ரேலியா அணிக்கு மேக்ஸ்வெல் அழைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மேக்ஸ்வெல் அளித்த ஒரு பேட்டியில், ‘ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் விக்டோரியா அணிக்காக விளையாடுகையில் கப்டனும், விக்கெட் கீப்பருமான மேத்யூ வேட்டுக்கு பிறகு தான் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கமாக விக்கெட் கீப்பர்கள் பின் வரிசையில் ...

Read More »

அவுஸ்ரேலியாவின் அதிசய பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளது

உலகின் மிகவும் அற்புதமான இயற்கை அதிசயங்களில் அவுஸ்ரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃபும் ஒன்று. கடலுக்கு அடியில் அதன் நிறமும், சுற்றியுள்ள உயிரினங்களும் கண்ணைக்கவரும். ஆனால் இதுவரை இல்லாத வகையில் அது பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வு முடிவுவொன்று கூறுகிறது. நீரின் வெப்பம் உயர்வதால் சில பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பவளப்பாறைகள் அங்கு அழிந்துள்ளன. விஞ்ஞானிகளுடன் சென்று நீருக்கு அடியில் இருக்கும் நிலையை பார்க்க பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு கிடைத்தது. விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Read More »

நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மித் சதத்தால் 68 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா. அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவுஸ்ரேலியா  மண்ணில் இன்று தொடங்கியது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிஞ்ச் தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி ரன் கணக்கை துவக்காமல் வெளியேறினார். வார்னர் 24 ரன்கள் சேர்த்தார். ...

Read More »

அவுஸ்ரேலியா-நியூஸிலாந்து இன்று சிட்னியில் பலப்பரீட்சை

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் சேப்பல்-ஹெட்லி ஒரு நாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் சிட்னியில் இன்று நடை பெறுகிறது. இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு இந்த ஆட்டம் நடக் கிறது. கடந்த ஆண்டு நடபெற்ற சேப்பல்-ஹெட்லி தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என வென்றிருந்தது. சமீபத்தில் பாகிஸ் தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரை ...

Read More »