ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய அவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
*அவுஸ்ரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய அவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹைடன் (2007) ஆகியோர் ஒரு ஆண்டில் 5 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
*அவுஸ்ரேலிய அணியின் 3-வது அதிகபட்ச ஸ்கோராக (378 ரன்) இது அமைந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 434 ரன்களும் (2006), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 417 ரன்களும் (2015) எடுத்த ஸ்கோர் முதல் இரு அதிகபட்சமாக நீடிக்கிறது.
* இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து பவுலர்கள் மேட் ஹென்றி 91 ரன்களும், டிரென்ட் பவுல்ட் 80 ரன்களும் வாரி வழங்கினர். ஒரே ஆட்டத்தில் நியூசிலாந்து பவுலர்கள் இருவர் 80 ரன்களுக்கு மேல் வழங்கியது இதுவே முதல் முறையாகும்.
Eelamurasu Australia Online News Portal