அவுஸ்ரேலியா-நியூஸிலாந்து இன்று சிட்னியில் பலப்பரீட்சை

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் சேப்பல்-ஹெட்லி ஒரு நாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் சிட்னியில் இன்று நடை பெறுகிறது.

இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு இந்த ஆட்டம் நடக் கிறது. கடந்த ஆண்டு நடபெற்ற சேப்பல்-ஹெட்லி தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என வென்றிருந்தது. சமீபத்தில் பாகிஸ் தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரை எதிர்கொள் கிறது.

அந்த அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் மீது அதிக எதிர் பார்ப்பு உள்ளது. 150 கி.மீ. வேகத் தில் பந்து வீசும் திறன் கொண்ட அவர் அவுஸ்ரேலிய  பேட்ஸ்மேன் களுக்கு நெருக்கடித் தரக்கூடும்.

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 0-5 என படுதோல்வி கண்டிருந்தது. மேலும் சமீபத்தில் தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடை பெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என பறிகொடுத்தது.

இதனால் நியூஸிலாந்து தொடரை வென்று விமர்சனங் களுக்கு பதிலடி கொடுக்க ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முயற்சிக்கக் கூடும். 2-வது ஒருநாள் போட்டி 6-ம் திகதி கான்பராவிலும், கடைசி ஒருநாள் போட்டி 9-ம் திகதி  மெல்போர்னிலும் நடைபெறு கிறது.