ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக் கழகத்தில், வன்முறைச் சம்பவம் பற்றிய மிரட்டல் விடுக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, பல்கலைக் கழக வளாகத்தின் சில கட்டடங்களில் இருந்து, மாணவர்களும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.
Victoria மாநிலத்தில் உள்ள, அந்தப் பல்கலைக் கழகத்தில் போலீசார் பாதுகாப்புச் சோதனை நடத்தினர்.
மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தப் பல்கலைக் கழகம் கூறியது.
சில நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவிலும், அதன் அண்டை நாடான நியூசிலந்திலும் உள்ள பள்ளிகளுக்கு, வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அண்மை மிரட்டல் விடுக்கப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal