அவுஸ்ரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயமடைந்தார். அவருக்கு பதிலாக 17 வயது புதுமுக வீரர் முகமத் அஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 15-ந்தேதி பிரிஸ்பெனில் தொடங்குகிறது.
இதற்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பதில் 17 வயது புதுமுக வீரர் முகமத் அஸ்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அவர் முதல்தர போட்டியில் 17 ஆட்டத்தில் 68 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal