அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவின் ராணி சிட்னி!

பசிபிக் கடலின் கரையில் அமைந்துள்ள அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரம் சிட்னி. 1788ல் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட நகரமான சிட்னி இன்று உலகம் வியக்கும் மாபெரும் நகரம். ஆங்கிலேயச் செயலாளர் சிட்னி பிரபு என்பவரின் பெயரை இந்நகருக்கு இட்டனர். அவுஸ்திரேலியாவின் பொருளாதார, வர்த்தக, தொழில், தகவல் தொடர்பு, மருத்துவ மய்யமாக சிட்னி இன்று விளங்குகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் மிதமான கோடையும், மிதமான குளிர்காலமும் இருப்பதால் எப்போதும் சென்று காணலாம். ஒபரா அவுஸ் தாமரை இதழ்களைப் போன்ற அமைப்புடைய கூரையுடன் சிட்னி துறைமுகம் ...

Read More »

முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்தியவர்

அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி, Turella பகுதியில் உள்ள வீட்டிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. முன்னதாக, 25 வயதான இளம் பெண் ஒருவர் தனது 29 வயது காதலனை விட்டு பிரிந்துள்ளார். இதனால், கோபமடைந்த காதலன், காதலியின் அழகான தோற்றத்த அழிக்க Turella பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து கத்தரிக்கோல் மூலம் முகம் உட்பட உடலில் 37 இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர ...

Read More »

நவுறு – மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை

அவுஸ்திரேலியாவின் நிர்வாகத்தில் உள்ள நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று அவர்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த நல்லெண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டுடன் குறித்த முகாம்களை பராமறிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவுக்கு வருகிறது.இன்னும் புதிய நிறுவனத்துக்கான கேள்வி அறிவிப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அகதிகள் பெரும் சவாலை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

903 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருள் பறிமுதல்!

அவுஸ்ரேலியாவில், 903 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருள், கைப்பற்றப்பட்டுள்ளது. அந்நாட்டில் நிகழ்ந்து இருக்கும் ஆகப் பெரிய சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் சம்பவம் அது. Ice எனும் crystal methamphetamine போதைப் பொருள் சீனாவிலிருந்து, அவுஸ்ரேலியாவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. பெட்டிகளில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட அவை, மெல்பர்ன் நகரிலுள்ள கிடங்கு ஒன்றில், கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 680 மில்லியன் அமெரிக்க டாலர். அவுஸ்ரேலிய  மத்திய காவல் துறையும், விக்டோரியா மாநில காவல்துறை  பிரிவும் இணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில், அந்தக் கடத்தல் முயற்சி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தான் மாணவருக்கு கத்தி குத்து!

அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தான் மாணவர் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இது ஐ.எஸ். தொடர்பு தாக்குதலா என்ற கோணத்தில் அவுஸ்ரேலிய காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தானை சேர்ந்த 29 வயது மிக்க இளைஞரை இரண்டு பேர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த அக்பர் என்ற அந்த மாணவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் நியூ சவுத் வால்ஸ் என்ற பகுதியில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டார். தாக்குதலுக்கு ஆளான அந்த மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் அவர் உயிருடன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஆறு உடைந்ததால் மூழ்கிய நகரம்

அவுஸ்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராக் கேப்டால் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி வெள்ளத்தால் மூழ்கியது. அவுஸ்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பிட்ஸ்சோவி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி சென்று கொண்டு இருந்தது. ராக் கேப்டால் என்ற இடத்தில் ...

Read More »

காப்பாற்றுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தால் வீட்டோடு குடும்பமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கும்!

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு, மீட்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட குடும்பம் ஒன்றின் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவர்களை காப்பாற்றுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தால் வீட்டோடு குறித்த குடும்பமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் டெபீ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில் அடைமழை பெய்து வந்ததாகவும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அனர்த்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த குயின்ஸ்லாந்து அவசர சேவையின் பேச்சாளர், “இந்த வெள்ளப்பெருக்கில் இருந்து ...

Read More »

அவுஸ்ரேலிய அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் இன்று கொழும்பு பயணம்

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார். இவர் அவுஸ்திரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருக்கும் முதலாவது பயணம் இதுவாகும். இவர் இன்றிலிருந்து எதிர்வரும் 7ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ளார். இதன்போது வடக்கு மாகாணத்துக்குப் பயணம் செய்து அங்கு அவுஸ்திரேலியாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்பார்வை செய்யவுள்ளார். அத்துடன், இவர் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார் என சிறிலங்காவிலிருக்கும் அவுஸ்திரேலியத் தூதரகம் அறிவித்துள்ளது.

Read More »

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி அவுஸ்ரேலியா விஜயம்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி (Ashraf Ghani) இன்று (திங்கட்கிழமை) அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயம் அவுஸ்ரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் உள்ள பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, அவர் அவுஸ்ரேலியாவின் பிரதமர் மல்க்கம் டர்ன்புல்லை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பெண்களின் தரத்தை மேம்படுத்தல் ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து மல்க்கம் உடனான பேச்சுவார்த்தையின் போது அக்கறை செலுத்தப்படும் என சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவில் வைத்தியராக ஆள்மாறாட்டம்!

நண்பரின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை திருடி அவுஸ்ரேலியாவில் வைத்தியராக நடித்து ஆள்மாறாட்டம் செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 30 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் முட நீக்கியல் துறை நிபுணராக பணியாற்ற இந்தியாவை சேர்ந்த ஷியாம் ஆச்சாரியா என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு இந்நாட்டுக்கு வந்துள்ளார். 2003-ம் ஆண்டிலிருந்து 2014 வரை சுமார் 11 ஆண்டு காலம் அந்த மருத்துவமனையிலும் அவுஸ்ரேலியாவில் உள்ள மூன்று இதர மருத்துவமனைகளில் உதவி வைத்தியராக  பணியாற்றிய ஆச்சாரியா, அந்நாட்டின் ...

Read More »