அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருக்கும் முதலாவது பயணம் இதுவாகும்.
இவர் இன்றிலிருந்து எதிர்வரும் 7ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ளார்.
இதன்போது வடக்கு மாகாணத்துக்குப் பயணம் செய்து அங்கு அவுஸ்திரேலியாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்பார்வை செய்யவுள்ளார்.
அத்துடன், இவர் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார் என சிறிலங்காவிலிருக்கும் அவுஸ்திரேலியத் தூதரகம் அறிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal