அவுஸ்திரேலியாவின் நிர்வாகத்தில் உள்ள நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று அவர்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த நல்லெண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டுடன் குறித்த முகாம்களை பராமறிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவுக்கு வருகிறது.இன்னும் புதிய நிறுவனத்துக்கான கேள்வி அறிவிப்பு விடுக்கப்படவில்லை.
இதனால் அகதிகள் பெரும் சவாலை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal