ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி (Ashraf Ghani) இன்று (திங்கட்கிழமை) அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயம் அவுஸ்ரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் உள்ள பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, அவர் அவுஸ்ரேலியாவின் பிரதமர் மல்க்கம் டர்ன்புல்லை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பெண்களின் தரத்தை மேம்படுத்தல் ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து மல்க்கம் உடனான பேச்சுவார்த்தையின் போது அக்கறை செலுத்தப்படும் என சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.