அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவில் வேகமாக வளரும் இந்துமதம்!

அவுஸ்ரேலியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்து மதத்தை பின்பற்றுவோர்கள் 4ஆம் இடத்தைப் பிடித்ததோடு, வேகமாக வளர்த்துவரும் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர். 2017ஆம் ஆண்டின் கணக்காய்வின்படி, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்து மதம், அவுஸ்ரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மதங்களின் பட்டியலைலில் இடம்பிடித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரைக்குமான கணக்கெடுப்பின் படி பார்க்கும்போது, இந்து மதம் கிட்டத்தட்ட 500 விழுக்காடு வேகமாக வளர்ந்துள்ளது. அவுஸ்ரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு லட்சத்து 29,900 பேர் இந்துக்களாக உள்ளனர். இவர்களில் தமிழர்களும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களின் பட்டியலில் சீனா முதலிடம்

அவுஸ்ரேலியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் கடந்த 2016ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 2.44 கோடி, இதில் 26 சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என அவுஸ்திரேலிய புள்ளிவிபரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் குடியேறியவர்களில் 1.91 லட்சம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும், 1.63 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 180 நாடுகளை சேர்ந்த 13 லட்சம் பேர் அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More »

இறக்கும் தருவாயில் இருந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தாய்

பிறந்து 32 நாட்களில் உயிரிழந்த குழந்தை, அசைவுடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை குழந்தையின் தாய் வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் Catherine Hughes. இவருக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. Riley என பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறந்தவுடனேயே கிருமி தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து இருமல் வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள மிஷினில் குழந்தையை வைத்து மருத்துவர்கள் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும், Riley உயிரிழந்து விடுவான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தனது குழந்தை கை, கால்களை அசைக்கும் ...

Read More »

குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே பேசி அசத்தியுள்ளார் பெண் அரசியல்வாதி. பெண்கள் குழந்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டியே வருகின்றனர். ஆனால் அவுஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் செயல் இதற்கு மாறாக அமைந்துள்ளது. ஜூன் 22ம் திகதி அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வாட்டர்ஸ் தன்னுடைய 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சபாநாயகர் வாட்டர்ஸை பேச அழைக்க சிறிதும் பதற்றமோ தயக்கமோ இல்லாமல் எழுந்த அவர் குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்து ...

Read More »

அவுஸ்ரேலியாவில் எத்தனை பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர்?

கடந்தவருடம் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளை, சென்சஸ் திணைக்களம் வெளியிட ஆரம்பித்துள்ளது. இதன்படி அவுஸ்ரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 73,161 என சென்சஸ் திணைக்கள தரவுகள் கூறுகின்றன. கடந்த 2011ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50,151ஆக காணப்பட்ட அதேநேரம் 2006ம் ஆண்டு 32,704 ஆக காணப்பட்டது. இதேவேளை அவுஸ்ரேலியாவில் ஆங்கிலம் உட்பட வீட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கடந்த 2011 இலிருந்து சுமார் 1.3 மில்லியன் பேர், புதிதாக அவுஸ்ரேலியாவில் ...

Read More »

குடியுரிமை விண்ணப்பங்கள் புதிய சட்டத்தின்படியே பரிசீலிக்கப்படும்!

அவுஸ்ரேலிய Citizenship-குடியுரிமைச் சட்டத்தைக் கடினமாக்கும் முனைப்பில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில், ஏப்ரல் 19ம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அனைத்தும், புதிய சட்டத்தின் கீழேயே பரிசீலிக்கப்படுமென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு முன்வைத்துள்ள குடியுரிமை தொடர்பான புதிய சட்ட முன்வடிவு இன்னமும் சட்டமாக்கப்படாத நிலையில், குடிவரவுத் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது. குடிவரவுத் திணைக்களம்வசம் தற்போது 81 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாத நிலையில் இருக்கும் அதேநேரம் தொடர்ந்தும் பலர் விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப்பின்னணியில் குடியுரிமை விண்ணப்பம் தொடர்பில் அழைப்பு மேற்கொள்பவர்களிடம், ஏப்ரல் 19ம் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் புதிய தொழிற்பட்டியல்!

மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் state nomination ற்குப் பயன்படுத்தப்படும் Skilled Migration Occupations List – தொழிற்பட்டியலிலிருந்த 178 வேலைகள் தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அங்குள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இம்மாற்றம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் Mark McGowan தெரிவித்துள்ளார். இதேவேளை மேற்கு அவுஸ்திரேலியாவில் சுரங்கத்தொழிற்றுறை நல்லதொரு முன்னேற்ற நிலையில் இருந்தபோது கட்டட மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்ட நிலையில், தற்போது ...

Read More »

கிறிஸ்மஸ் தீவிலிருந்து ம் 20 அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைப்பு!

கிறிஸ்மஸ் தீவிலிருந்து இன்று அதிகாலை வாடகை விமானம்மூலம் 20 இலங்கை அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி அவுஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் உத்தியோக பூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கிறிஸ்மஸ் தீவில் இரண்டு கடற்படையின் படகுகளுக்கருகில் ஒரு சிறிய படகு நின்றதை கிறிஸ்மஸ் தீவு மக்கள் அவதானித்தனர். இதனால், சிறிலங்காவில் இருந்து அகதிகள் படகு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அகதிகள் படகொன்று இடையில் மறிக்கப்பட்டு 25 அகதிகள் ...

Read More »

விக்டோரியாவில் Red Light & Speed கமெராக்கள் இயங்கவில்லை!

விக்டோரிய மாநிலத்தில் சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள சிவப்பு விளக்கு (fixed red light) மற்றும் (வேகத்தை படமெடுக்கும்)  280 கமெராக்களை (கருவிகளை) தற்காலிகமாக பயன்பாட்டிலிருந்து நிறுத்திவிட அரசு முடிவு செய்துள்ளது. குறைந்தது 55 கமேராக்களின் கணினிகளில் (Computers) வைரஸ் இருப்பதாக நம்பப்படுவதால் இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் 6 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 22 ஆம் திகதிவரை இந்த கமெராக்கள் படமெடுத்த 7500 படங்களும் மீளாய்வு செய்யப்பட்டு, இந்த  7500 அபராத டிக்கெட்டுகள் மறு பரிசீலனைக்கு உடபடுத்தப்படும் ...

Read More »

மேற்கு அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்!

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் state nomination-க்குப் பயன்படுத்தப்படும் Skilled Migration Occupations List – தொழிற்பட்டியலிலிருந்த 178 வேலைகள் தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இம்மாற்றம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் Mark McGowan தெரிவித்துள்ளார். மேற்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கத்தொழிற்றுறை நல்லநிலையில் இருந்தபோது கட்டட மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்ட நிலையில், தற்போது அவ்வேலைகள் அனைத்தும் தொழிற்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. கீழ்க்காணும் மருத்துவதுறைசார் வேலைகள் மட்டுமே மேற்கு ஆஸ்திரேலிய மாநில தொழிற்பட்டியலில் எஞ்சியுள்ளன. ...

Read More »