மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் state nomination ற்குப் பயன்படுத்தப்படும் Skilled Migration Occupations List – தொழிற்பட்டியலிலிருந்த 178 வேலைகள் தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அங்குள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இம்மாற்றம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் Mark McGowan தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்கு அவுஸ்திரேலியாவில் சுரங்கத்தொழிற்றுறை நல்லதொரு முன்னேற்ற நிலையில் இருந்தபோது கட்டட மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்ட நிலையில், தற்போது அவ்வேலைகள் அனைத்தும் தொழிற்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.