கிறிஸ்மஸ் தீவிலிருந்து இன்று அதிகாலை வாடகை விமானம்மூலம் 20 இலங்கை அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி அவுஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் உத்தியோக பூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கிறிஸ்மஸ் தீவில் இரண்டு கடற்படையின் படகுகளுக்கருகில் ஒரு சிறிய படகு நின்றதை கிறிஸ்மஸ் தீவு மக்கள் அவதானித்தனர்.
இதனால், சிறிலங்காவில் இருந்து அகதிகள் படகு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் அகதிகள் படகொன்று இடையில் மறிக்கப்பட்டு 25 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal