விக்டோரிய மாநிலத்தில் சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள சிவப்பு விளக்கு (fixed red light) மற்றும் (வேகத்தை படமெடுக்கும்) 280 கமெராக்களை (கருவிகளை) தற்காலிகமாக பயன்பாட்டிலிருந்து நிறுத்திவிட அரசு முடிவு செய்துள்ளது.
குறைந்தது 55 கமேராக்களின் கணினிகளில் (Computers) வைரஸ் இருப்பதாக நம்பப்படுவதால் இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.
மேலும், ஜூன் மாதம் 6 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 22 ஆம் திகதிவரை இந்த கமெராக்கள் படமெடுத்த 7500 படங்களும் மீளாய்வு செய்யப்பட்டு, இந்த 7500 அபராத டிக்கெட்டுகள் மறு பரிசீலனைக்கு உடபடுத்தப்படும் என்று . காவல்துறை அமைச்சர் Lisa Neville கூறினார்.
மேலும் இந்த 280 கமெராக்களும் மறு சோதனைக்கு உடபடுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.