அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியா: கிரிக்கெட் வீரர்களுடனான சம்பள பிரச்சனையால் தென்னாப்ரிக்கா சுற்றுபயணம் ரத்து

அவுஸ்ரேலியா கிரிக்கெட் சங்கம் மற்றும் வீரர்களிடையேயான சம்பள பிரச்சனையால் வீரர்கள் போட்டிகளை புறக்கணித்ததை அடுத்து தென்னாப்ரிக்க சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் சங்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வீரர்களுக்கு சம்பளம் வழங்கும் முறையில் திருத்தம் செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அதே சம்பளம் வழங்கவும், மற்ற உள்ளுர் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை நிருத்தி அதை வேறு சில முன்னேற்ற காரியங்களுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் அனைத்து வீரர்களும் கையெழுத்திட கடந்த ஜூன் 30 வரை கால ...

Read More »

விமானம் மீது மோதிய பறவைகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 350 பயணிகள்

அவுஸ்ரேலியாவில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதை தொடர்ந்து விமானம் அவசரமாக திசை திருப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்தில் இருந்து AirAsia X என்ற விமானம் 359 பயணிகளுடன் நேற்று புறப்பட்டுள்ளது. மலேசியா தலைநகரான கோலாலம்பூருக்கு புறப்பட்ட அந்த விமானத்திற்கு வெளியே திடீரென பலத்த ஓசை அடுத்தடுத்து எழுந்துள்ளது. விமானத்தின் என்ஜின் மீது பறவைகள் மோதியது போன்று அந்த சத்தம் இருந்ததால் விமானி உடனடியாக திசை திருப்பி பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. விமானம் ...

Read More »

மில்லியன் பணத்துடன் பணப்பெட்டியைக் கண்டெடுத்த காவல்துறை!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1.6 மில்லியன் டொலர் பணத்துடன் சூட்கேஸ் ஒன்னை காவல் துறையினர்  கண்டெடுத்துள்ளனர். Wetherill Park-இலுள்ள Warehouse ஒன்றினுள் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டபோதே இந்த பணப்பெட்டி காவல் துறையினரால்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உரிமைகோரப்படாத பணமாக அறிவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நியூ சவுத் வேல்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பணம் இது உங்களுடையதாக இருந்தால் உடனடியாகத் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இவ்விடயம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற ...

Read More »

அவுஸ்ரேலியாவில் விமானக் கட்டணம் குறைவடைகிறது!

அவுஸ்ரேலியாவின் விமான பயணச் சீட்டுகளில் விலை குறைவடையும் என மெல்போர்ன் விமான நிலைய தலைமை அதிகாரி Lyell Strambi தெரிவித்துள்ளார். மெல்போர்ன் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோதே Strambi மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; மெல்போர்ன் விமான நிலையத்தில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டதனால், விமான நிறுவனங்கள் செலுத்தும் கட்டணங்கள் கணிசமாக குறைகின்றன என்றும், எனவே விமான நிறுவனங்களால் பயணக் கட்டணத்தை குறைக்க முடிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

போப்பாண்டவரின் உதவியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தும் போப்பாண்டவரின் உதவியாளர்களில் முக்கியமான நபரான கார்டினால் ஜார்ஜ் பெல் என்பவர் மீது அவுஸ்திரேலியா காவல் துறையினர் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் மற்றும் சிட்னி மறைமாவட்டங்களில் பேராயராக பணியாற்றியவர் கார்டினால் ஜார்ஜ் பெல். இவர் அவுஸ்திரேலிய கத்தோலிக்க திருச்சபையில் முக்கியமான நபராக கருதப்படுகிறார். முன்னாள் போப்பாண்டவர் பெனடிக்ட் ராஜினாமா செய்த பிறகு போப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்ட பிரான்சிஸ்சின் உதவியாளராகவும் நிதி ஆலோசகராவும் ஜார்ஜ் பெல் செயல்பட்டுவருகிறார். இவர் வத்திகான் மாநகரில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இன்று முதல் தற்காலிக வேலை விசா திட்டம்!

அவுஸ்ரேலியாவில் தற்காலிக வேலை விசா Temporary Work visa (subclass 457) திட்டத்திற்கான புதிய தொழிற்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் வேலை செய்வதற்கு 457 விசா திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்குப் பதிலாக தற்போது மாற்றியமைக்கப்பட்ட தற்காலிக வேலை விசா தொழிற்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்ற இந்த தற்காலிக வேலை விசா திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்கள் பணிநிமித்தம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முடியும். இதன்படி Medium and Long‑term Strategic Skills List (MLTSSL) மற்றும் Short‑term ...

Read More »

அவுஸ்ரேலியாவின் முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கம்!

அவுஸ்ரேலியாவின் முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடுருவல் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டே குறித்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மெல்பேர்னில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது, “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இராணுவ இணையப் பிரிவால் ஐ.எஸ் இற்கு எதிராக இலக்கு வைக்க முடியும். அத்துடன் ஆயுதப் படைகளை இணையத் தாக்குதலில் இருந்து ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு

இந்தோனேஷிய மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் வாகை சூடிய இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். இந்தோனேஷிய மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் வாகை சூடிய இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன், அவுஸ்ரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ...

Read More »

மூத்த பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டு – மெல்போர்ன் நீதிமன்றில் ஆஜர்

வாடிகனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜார்ஜ் பெல் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு  நீதிமன்றில்  நடக்க உள்ள விசாரணையில் பங்கேற்க அவர் நேரில் செல்கிறார். வாடிகனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது உயர்ந்த அதிகார மையம், கார்டினல் ஜார்ஜ் பெல் ஆவார். பாதிரியாரான இவர்தான், வாடிகன் பொருளாளர். 76 வயதான ஜார்ஜ் பெல் மீது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். இது தொடர்பாக அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண உயர்   நீதிமன்ற அதிகாரி பேட்டன் கூறுகையில், “கார்டினல் ...

Read More »

6 மாதம் தடை: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில் 6 மாதம் தடைவிதிக்கப்படும் என்று அவுஸ்ரேலிய லியா கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்திற்கும் இடையே ஊதியம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. நாங்கள் கேட்கும் ஊதியம் கிடைக்கும் வரை போராடுவோம். ஆஷஸ் தொடரைக்கூட புறக்கணிக்கலாம் என்று துணை கப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் வரும் 30-ந்திகதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 1-ந்திகதியில் இருந்து புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். வீரர்கள் ஒப்பந்தத்திற்கு ...

Read More »