மில்லியன் பணத்துடன் பணப்பெட்டியைக் கண்டெடுத்த காவல்துறை!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1.6 மில்லியன் டொலர் பணத்துடன் சூட்கேஸ் ஒன்னை காவல் துறையினர்  கண்டெடுத்துள்ளனர்.

Wetherill Park-இலுள்ள Warehouse ஒன்றினுள் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டபோதே இந்த பணப்பெட்டி காவல் துறையினரால்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது உரிமைகோரப்படாத பணமாக அறிவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நியூ சவுத் வேல்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தப் பணம் இது உங்களுடையதாக இருந்தால் உடனடியாகத் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இவ்விடயம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்தில் Crime Stoppers ஐத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.